எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் இவ்வாரமானது எதிர்வரும் வரும் வருடம் தொடக்கம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்தினத்தை முன்னிட்டு, பாடசாலைகள், ஊடகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பவற்றை மையமாக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் மற்றும் பிரதிபலிக்கும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் இத்தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.