தேசிய சட்ட மாநாட்டை அடுத்தவருடம் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாட்டில் பொருளாதாரத்தில் பங்களிப்பு வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இம்மாநாடு நடத்தப்படவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதற்தடவையாக நடத்தப்படும் இம்மாநாடாது, இலங்கையின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் மத்திய வங்கி உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களின் தலைவர்களுடன் இணைந்து நடாத்தப்படுகிறது.