தென் கிழக்கு பல்கலைகத்தின் 6ஆவது சர்வதேச ஆய்வரங்கு நாளை (20) பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது என ஆய்வரங்கு இணைப்பதிகாரி கலாநிதி எச்.எம்.எம் நளீர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பீடங்களுக்கு பொதுவான முறையில் நடத்தப்படும் இவ்வாய்வரங்கமானது இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட 5 ஆய்வரங்கங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை அதிக எண்ணிக்கையான தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்முறை கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்முறை தகவல் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் இவ்வாய்வரங்கம் நடைபெறவுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் சுமார் 170 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம் நாஜிம், பேராததை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சில்வா சுடோ, ஆய்வரங்கத்தின் இணைப்பு அதிகாரி எச்.எம்.எம். நளீர், ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.