கம்பஹா மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (19) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இன்று பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் இவ்வருத்தில் கம்பஹா மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட திட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும சிவில் அமைப்புக்களின் மாவட்ட சம்மேளம் அமைத்தல் தொடர்பிலும் இக்கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
கம்பஹா மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலக அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் சாக்யா நாணயக்கார, பணிப்பாளர் ரஞ்சித் விமலசூரிய ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தினுல் இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் தொடர்பாடல் டப்ளியு.ஏ.என் ஐ விஜேசூரிய தெரிவித்தார்.