நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது.
நாடு முடுவதும் 661 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல் நடத்தப்படவுள்ளாதகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கு 916 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் 340,000 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது
மேலும் இத்தேர்தலினூடாக 225 தொகுதிகளுக்கு 160 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றும் மிகுதி தொகுதிகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், பாடசாலை தலைவர்கள், ஏனைய இளைஞர் அமைப்புக்களின் அங்கத்தவர்கள், திறமை மிக்க இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்படுவர் என்றும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.