வட மாகாண பண்பாட்டுப் பெருவிழா நாளை (03) மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் இப்பண்பாட்டு பெருவிழாவானது நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு கலாசார நிகழ்வுகள்இ கலைச்சாகரம் கையேடு வெளியீடு மற்றும் கலைச்சாகரம் விருது வழங்கும் நிகழ்வு முதலானவைஇடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மருதங்கேணி பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் சிறப்பு விருந்தினராகவும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் மற்றும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.