சர்வதேச விசேட தேவைக்குரியோர் தின தேசிய நிகழ்வு நாளை (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலன்னறுவை புலதிசிபுர தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இத்தேசிய நிகழ்வில், அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுந் பி.பி. திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.