தேசிய உணவு வாரத்தை முன்னிட்டு மாகாண சுகாதார பணிமனையினால் திருகோணமலை மட்டக்களாப்பு அம்பாறை மாவட்டங்களில் விசேட விழிப்பணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாரத்தில் உணவுச் சட்டம் சூழல் பாதுகாப்பு டெங்கு ஒழிப்பு போன்ற செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (29) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
மாகாணத்தில் சுற்றுலாத்துறை அதிக வருமானம் ஈட்டி வருவதாலும் சர்வதேச தரத்திற்கு சுகாதாரத்துறையை முன்னெடுப்பதற்காகவும் பொதுமக்களுக்கு தொற்றா நோய்கள் பரவாமல் தடுக்கும் வண்ணம் சுத்தமான உணவுகளை கிடைக்கப்பெறச் செய்யவும் மழை காலங்களில் டெங்கு நோய் வராமல் தடுக்கும் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்கவும்
நல்லாட்சி அரசாங்கத்தில் சகல திணைக்களங்களின் உதவியுடன் திட்டங்களை முன்னெடுக்கவும் சகல கிராம சேவகப் பிரிவுகளிலும் வாரம் ஒரு தடவை பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மாகாணத்தில் எந்நேரமும் முன்னெடுக்க எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அகமட், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தம், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், பிராந்திய வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் மற்றும் வைத்தியர்கள் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
LDA_dmu_batti