• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய மாநாடு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
 
இலஞ்ச ஊழல் தொடர்பான சம்பவங்களை ஊடகத்தில் அறிக்கையிடல் குறித்து அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (29) நடத்தப்பட்ட செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
 
வெறுமனே மாநாடொன்றை நடத்திவிட்டு கைகளை தட்டி ஆராவரித்து விட்டு செல்லும் மாநாடாக இது இருக்கப்போவதில்லை. தீர்மானங்கள், அவற்றை நடத்துவதற்கான செயற்றிட்டங்கள் என்பன தொடர்பில் ஆராயப்படுவதுடன் கொள்கைகளும் வகுக்கும் வகையில் இம்மாநாடு அமையும் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய, அமைச்சரவை அங்கீகாரத்துடன் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், கடந்த மே மாதம் இலண்டனில் நடைபெற்ற ஊழல் மோசடி தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு பாரிய வரவேற்பு காணப்பட்டது. ஊழல் மோசடிகளை ஒழிக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச தலைவர்கள் பாராட்டினர். அதன் பின்னர் நாடு திரும்பிய ஜனாதிபதி அதன் போது இவ்வருடம் நிறைவடைவதற்கு முதல் இலங்கையில் தேசிய ஊழல் மோசடி தொடர்பான தேசிய மாநாட்டை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் முன்மொழிந்தார். அதற்கேற்ப தற்போது மாநாட்டை நடத்துவதற்கான காலம் நெருங்கியுள்ளது. சிறந்த வளவாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
ஊழலை ஒழிப்பதற்கு அடிப்படையில் இருந்து செயற்பட வேண்டும். எனவே பாடசாலை, பல்கலைகழக மட்டங்களில் இதனை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இவ்விடயத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஊடகத்திற்கு பாரிய பங்கு உள்ளது. அதனை ஊடகம் செவ்வனே செய்யவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
இச்செயலமர்வில், ட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன, தலைவர் நெவில் குரகே, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்  ரங்க கலன்சூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 15.07.2024

16 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 09.07.2024

10 July 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 01.07.2024

02 July 2024

cabinet Decisions taken by Cabinet Ministers on 01.07.2024

Cabinet Decisions - 19.06.2024

20 June 2024

Decisions taken by the Cabinet Ministers on 2024.06.19

Cabinet Decisions - 12.06..2024

13 June 2024

Cabinet Decisions taken by the Cabinet Ministers on...

Cabinet Decisions - 04.06.2024

04 June 2024

Decisions taken by the Cabinet Ministers on 03.06.2024

Cabinet Decisions - 27.05.2024

28 May 2024

Cabinet Desicions taken by Cabinet Ministers on 27.05.2024

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.