சேர் பொன்னம்பலம் இராமநாதனின் சிரார்த்த தினம் இம்மாதம் 30ஆம் திகதி காலி தென்மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வானது தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையில் நடைபெறவுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வில் விசேட அதிதியாக மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார்.