சர்வதேச சமுத்திர மாநாடான ' காலி கலந்துரையாடல் 2016' எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படையானது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து 7ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கௌரவ அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த கடற்படை மற்றும் சமுத்திரதுறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 சர்வசேத நிறுவனங்கள் கலந்துகொண்டு தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவுள்ளன.
'கடல்சார் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான மூலோபாயம்' என்ற தொனிப்பொருளில் இம்முறை 'காலி கலந்துரையாடல் 2016' நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களை www.galledialogue.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து அறிந்துகொள்ளலாம்.