சுமார் மூவாயிரம் ஆண்டும்களுக்கு முன்னையதாக கருதப்படும் மயானமொன்று பொலன்னறுவை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, எலஹர, சிரிகது யாய கடுவ எனப்படும் பிரதேசத்தில் இம்மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலாசார நிதியத்தினூடாக பொலன்னறுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் விசேட தொல்பொருள் ஆய்வு நடவடிக்கையின் போது இம்மயானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மெகலிதிக் வகைசார்ந்த புராதன மயானம் என்றும் ஆரம்பகட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரஷாந்தன குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மேலதிக விபரங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதன் பின்னர் அதனை புராதன சின்னமாக பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இக்கண்டுபிடிப்பானது பொலன்னறுவை யுகம் தொடர்பான ஆழமான தகவல்களை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.
பொலன்னறுவையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மாயானமாக இதனை அடையாளப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.