மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
காலை 9.30 மணிக்கு மாத்தறை மாவட்டச் செயலக காமினி ஜயசேக்கர கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டம் குழுவின் சம தலைவர்களான நிதி இராஜாங்க அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
இக்கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றில் ஏற்படும் பிரச்சினைகள் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் மாத்தறை மாவட்ட அரச நிறுவனங்களின் அபிவிருத்த முன்னேற்றம் மற்றும் 2016 அபிவிருத்தி திட்டமிடல் உட்பட பல முக்கிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள, அமைச்சர்கள், தென் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.