ஜனாதிபதி தலைமையில் இன்று (22) பாராளுமன்றில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களினதும் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாகாணங்களுக்கான நிதியொதுக்கீடு மற்றும் அதிகார மட்ட நிர்வாக பிரச்சனைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இவ்விசேட கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது உள்ள நிலைமை மற்றும் அபிவிருத்தி என்பன தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறித்த மாகாணங்களில் தற்போது காணப்படும் குழு மோதல்கள் மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி விரிவாக கேட்டறிவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.