• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

திடீர் விபத்துக்களினால் வருடாந்தம் 2500 பேர் மரணம்

திடீர் விபத்துக்கள் காரணமாக இலங்கையில் வருடாந்தம் 2500 பேர் உயிரிழக்கின்றனர்.  அவர்களில் பெரும்பாலானவர்கள் 15 - 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
விபத்துக்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் சர்வதேச தினத்தை முன்னிட்டு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பணிப்பாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் விபத்துக்களில் சிக்கியவர்கள்.  வீதி போக்குவரத்து சமிக்ஞைகள் கவனியாமை  போன்றே வீதியை பயன்படுத்துவதில் உள்ள கவனயீனமும் இத்தகைய விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.
 
எனவே அவற்றை நாம் சரியான முறையில் பின்பற்றினால் இத்தகைய விபத்துக்களை குறைக்க முடியும். கடந்த ஆண்டு மேல் மாகாண பாடாசாலை போக்குவரத்து வாகன சாரதிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். அத்திட்டம் இவ்வருடம் டிசம்பர் மாதமும் நடைமுறைப்படுத்தப்படும்.
 
இலங்கை பொலிஸ் மற்றும் சுகாதார திணைக்களம்  இணைந்து முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள முச்சக்கர வண்டிகள் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இவ்வாண்டு சுகாதார சேவைகளை வழங்குவதற்காக 5500 மில்லியன் ரூபா நிதி அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும், அதிக வேகமாக வாகனம் ஓட்டுதல், வீதி சமிக்ஞைகளை கவனத்தில் கொள்ளாமை, கவனயீனம் போன்ற காரணங்களினால் விபத்துக்கள் நடைபெற்ற போதும் சரியான முறையில முதலுவி வழங்காமை மற்றும் பிழையான முறையில் முதலுதவி வழங்குதல் மற்றும் போக்குவரத்து வழங்குதல் என்பன விபத்துக்குள்ளான நபர் உயிரிழப்பதற்கான முக்கிய காரணமாகும் என்று தேசிய வைத்தியசாலையின் பயிற்சி வழங்கும் தாதி அதிகாரி புஷ்பா ரம்யானி த சொய்சா தெரிவித்தார்.
 
இவ்வூடகவியலாளர் சந்திப்பில், 'வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் எமது பொறுப்பு' என்ற தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் வீதி விபத்துக்கள் பிரதான காரியாலயத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கே. ஏ. கித்சிரி குமாரவும் 'வீதி விபத்துக்களை  தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கடப்பாடு' என்ற தொனிப்பொருளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) ஆர்.ஏ. சுதத் ஆகியோரும் தெளிவுபடுத்தினர்

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.