க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ள நிலையங்களை சூழவுள்ள பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு விடேச பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் டெங்கு நோய் மிக வேகமாக பரவி வருவதனால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் தெரிவித்தார்.
மேலும் பிராந்திய சுகாதார பிரிவுகளும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது வைத்திய அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.