இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் அரச அதிகாரிகளுக்கு தமிழ் மொழி பயிற்சி நெறிகள் அண்மையில் கேகாலையில் ஆரம்பிக்கப்பட்டன.
கேகாலை மாவட்ட அரச அதிகாரிகளுக்கான இவ்விசேட மொழி பயிற்சியானது, குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் வழங்கப்படவுள்ளன.
கேகாலை மாவட்டத்தின் இரு பிரதேச செயலகங்களை உள்ளடக்கும் வகையில் 71 அரச அதிகாரிகள் குறுகிய கால தமிழ் மொழி பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர். மத்திய கால மற்றும் நீண்ட கால மொழிப்பயிற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அண்மைய நிகழ்வின் இறுதியில் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய நல்லிணக்க மற்றும் தேசிய மொழிகள் பயிற்சி நிறுவகத்தினால் ஏற்பாட்டில் இப்பயிற்சி நெறி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கேகாலை மாவட்ட மாவட்டச் செயலாளர் டப்ளியு.ஏ. அபேவிக்கிரம வனசூரியவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக மாவட்டச் செயலாளர் கலந்துக்கொண்டிருந்தார்.
இந்நிகழ்வில், கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் பிரபாத் உதாகர, மாவட்ட உதவிச் செயலாளர் சமன் அநுர, அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.