• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

அடையாள அட்டை பெறாத மாணவர்களுக்காக நாளை விசேட சேவை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக நாளை (19) ஒருநாள் சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார அறிவித்துள்ளார்.
இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளாத மாணவர்களுக்காக உடனடியாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்கும் வகையில் இச்சேவை நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
 அதற்கமைய நாளை காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விஷேட ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும். 
 
ஒருநாள் சேவைக் கட்டணமாக 1000 ரூபா அறவிடப்படும். என்றும் அன்றைய தினம் பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் வருவது கட்டாயமல்ல.
 
விண்ணப்பதாரியின் பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைக்கான உரிய ஆவணங்களுடன் வருகை தந்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
 
 இதேவேளை அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, இதுவரை கிடைக்கப் பெறாத மாணவர்கள் மற்றும் சரியான ஆவணங்களை சமர்பிக்காத விண்ணப்பதாரிகள்  நாளை சனிக்கிழமை அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இது தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக 0112 86 22 17 மற்றும் 0112 86 22 28 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகள்

Cabinet Decisions - 2024.10.28

29 October 2024

Cabinet Decisions taken at the Cabinet meeting conducted...

Cabinet Decisions 2024.10.21

22 October 2024

 Cabinet Decisions on 21.10.2024

Cabinet Decisions - 2024.10.07

08 October 2024

Cabinet decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.30

01 October 2024
Cabinet Decisions - 2024.09.30

Cabinet Decisions taken on 30.09.2024

Cabinet Decisions - 2024.09.13

14 September 2024

Cabinet Decisions taken at the Cabinet Meeting conducted...

Cabinet Decisions - 2024.09.03

03 September 2024

2024.09.03 Cabinet Decisions taken at the Cabinet Meeting...

Cabinet Decisions - 2024.08.26

28 August 2024

Decisions taken by the Cabinet of Ministers on...

Cabinet Decisions - 2024.08.21

22 August 2024

 Cabinet decisions taken at the cabinet meeting conducted...

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.