தொலைக்காட்சி அரச விருது வழங்கல் விழா 2016 இம்மாதம் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சிரேஷ்ட ஊடகவியலாளர், ரூபவாஹினி திரைகதை எழுத்தாளர் சோமவீர சேனாநாயக்க மற்றும் பலம்பெரும் நடிகை ஐராங்கனி சேரசிங்க ஆகியோரின் தலைமையில் இவ்விருது வழங்கல் விழா நடைபெறவுள்ளது.
ரூபவாஹினி தயாரிப்புக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டும் கலைஞர்களை அரச மட்டத்தில் கௌரவிக்கும் வகையில் நடத்தப்படும் ஒரே விருது வழங்கல் விழா இதுவாகும். இவ்விழாவில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலமான நிகழ்ச்சிகளில் 40 பிரிவுகளின் கீழ் சிறந்த 70 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளது.
இவ்விருது வழங்கல் விழாவில் சிறந்த நாடக கலைஞர், பாடல் ஆசிரியர் லூஷன் புலத்சிங்களவிற்கு வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
இவ்விருது வழங்கல் விழாவில் தொலைக்காட்சி கலை தொடர்பான ஆக்கங்கள் அடங்கிய ' ரூபவாஹினி சமீக்ஷ' சஞ்சிகையின் 10 மலர் வௌியிடப்படவுள்ளது.
உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விருது வழங்கல் விழாவில் உள்விவகார, வடமேல் மாகாண மற்றும் கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, பிரதியமைச்சர் பாலித்த தெவரபப்பெரும மற்றும் பாராளுமன்ற விவகார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.