நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இளைஞர் பாராளுமன்றம் அமைக்கும் திட்டத்தின் கீழ் தென் மாகாண பாடசாலைகளில் மாணவர் பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான அறிவுறுத்தல்களை மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் பிமல் இந்திரஜித் மாகாண கல்வியமைச்சுக்கு வழங்கியுள்ளார்.
இதற்கமைய, குறித்த விடயம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மாகாண செயலாளர்கள், பிரதி மற்றும் பதில் பணிப்பாளர்கள் என அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. மாகாண செயலாளர்கள், பணிப்பாளர்களினூடாக குறித்த விடயம் விடயம் தொடர்பான சுற்றுநிருபம் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளளன.
வாக்களிப்பு, வாக்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பு உரிமை என்பன தொடர்பில் மாணவர்கள் அறிந்துக்கொள்ளும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.