யுத்தத்தின் பின்னர் போதைவஸ்து பாவனை மற்றும் மதுபாவனை அதிகரித்துக் கொண்டு செல்வதாக அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா கருத்துத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற மதுபாவனையைக் கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (09) புதன்கிழமை பிரதேச செயலகத்தின் நடைபெற்றபோது பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நீதவான் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில், ஜனாதிபதியின் ஏற்பாட்டின் கீழ் மாவட்டங்களிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றமை முக்கியமான விடயமாகும். இவ்வாறான மாவட்டங்கள்தோறும் போதை வஸ்த்து தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெறுவதினால் இதுவொரு தேசிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது.
மது பாவனையைப் பொறுத்த வரையில் வீடுகளில் பல பிரச்சனைகள் இடம்பெறுகின்றன. நான் நீதிவானாக இருந்து கொண்டு நீதி மன்றங்களில் பல விடங்களை ஆராய்கின்றபோது தண்டனையை மாத்திரமாக கொண்டு போதை வஸ்துடன் கைது செய்யப்படடவருக்கு அவர் வைத்திருக்கும் தன்மைக்கு ஏற்ப ஆராய்ந்து சட்டப் புத்தகத்தில் உள்ளவாறு தண்டனையை வழங்கிவருகின்றோம்.
குறித்த போதை வஸ்து பாவனையினால் வீடுகளில் அடிப்படைத் தேவை உட்பட உணவுக்கு கூட இல்லாத நிலையில் அனைத்து பணமும் குடிப்பதற்கே சென்று விடுகின்றது.
பணம் சேமிக்கப்படுகின்றமை மிக மிக குறைவாக உள்ளது. குடிப்பதற்கு செலவழிக்கும் பணத்தை பிள்ளைகளின் நல்வழிக்கு பயன்படுத்தவதற்கு சேமிக்கும் பழக்க வழக்கங்களை முன்கொண்டு வரவேண்டும்.
அண்மைக் காலத்தில் வவுனியா பிரதேசத்தில் தாயும் பிள்ளைக்கும் நேர்ந்த அவலச் சம்பவம் கணவன் குடிபோதையில், கடன் பிரச்சினை அபாயகாரமாக அமைந்திருக்கின்றது.
குடிபோதை காரணமாக குடும்பங்களில் பல்வேறுபட்ட உளத் தாக்கங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நீதி மன்றங்களில் வரும் வழக்குகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறான அடிப்படை காரணங்களைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் நடைபெறும் போதை வஸ்து தொடர்பான கருத்தரங்கும் அமைந்துள்ளது என தெரிவித்தார்.
LDA_dmu_batti