தேசிய சுவடிகள் பாதுகாப்பு வாரம் இன்று (07) ஆரம்பமாகின்றது.
'தேசிய சுவடிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற ஆவணங்கள்' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படவுள்ள இவ்வாரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கொழும்பு தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் பைஸர் முஸ்தபா கலந்துகொள்ளும் விசேட அதிதியாக இந்நிகழ்வில் சுவடிகள் பாதுகாப்பை எடுத்து இயம்பும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாரத்தை முன்னிட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி பாடசாலை மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி நடத்தப்படவுள்ளதுடன் திணைக்களத்தில் 25 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்தவர்கள் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படவுள்ளனர்.
மேலும். இவ்வாரத்தில் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுவடிகள் பாதுகாப்பு தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன் ஆவணப் பாதுகாப்புத் தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
. தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களமானது வருடாந்தம் சுவடிகள் பாதுகாப்பு வாரத்தை பிரகடனப்படுத்தி சுவடிகள் பாதுகாப்பின் முக்கியத்தும் தொடர் அனைவர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.