தேசிய விஷ ஒழிப்பு வாரம் இன்று (17) ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 23ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள இவ்விஷ ஒழிப்பு வாரமானது, 'விஷ ஒழிப்பில் தொடர்பாடல் சாதனங்கள் மற்றும் சமூக வலைகத்தளங்களின் பயன்பாடு' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தேசிய விஷத் தகவல்கள் நிலையத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்படவுள்ள இவ்வாரத்தில், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என்பவற்றை மையப்படுத்தி, பல்வேறு சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று நிலையத்தின் அதிபர் டொக்டர் வருணா குணதிலக்க தெரிவித்தார்.
விஷ ஒழிப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்வாரத்தை முன்னிட்டு, விஷ ஒழிப்பு தொடர்பான கல்விக் கண்காட்சியும் தேசிய வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பான நான்கு இலத்திரனியல் புத்தகங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அப்புத்தகங்களை ஒன்லைனில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் என்றும் டொக்டர் குணதிலக்க மேலும் தெரிவித்தார்.