இலங்கை உணவுத் திருவிழா கண்காட்சி மற்றும் விவசாய உற்பத்தி விற்பனை நிகழ்வு எதிர்வரும் 14ஆம திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை விகாரமாதேவி பூங்காவின் கிறீன் பாத் பகுதியில் நடைபெறவுள்ளது.
தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி மற்றும் வர்த்தக நிகழ்வு விவசாயிகள் வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புராதன உணவு வகை காட்சிப்படுத்தபடவுள்ளதுடன் உணவு தொடர்பான செயலமர்வுகள், கல்வி நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெறவுள்ளன.
இக்கண்காட்சியை இலவசமாக கண்டுகளிக்க முடியும். ஆரம்ப நிகழ்வு 14ஆம் திகதி கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் வசந்த அளுவிஹார ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணிவரை பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட முடியும்.