பாடசாலை இடைநிறுத்திய மற்றும் தொடர்ச்சியாக பாடசாலை செல்லாத 449 பிள்ளைகளை அடையாளங்கண்டு அவர்களில் 326 பேர் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 மாத காலத்திற்குள் அடையாளங்காணப்பட்ட பிள்ளைகளே இவ்வாறு மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று என்று நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் மாத்தறை மாவட்ட சிறுவர் உரிமை அபிவிருத்தி அதிகாரி டி.எச்.ஜே.பீ புத்திக்க தெரிவித்துள்ளார்.
16 வயது பூர்த்தியாகிய, மீண்டும் பாடசாலை செல்ல விரும்பாத பிள்ளைகளுக்கு தொழில்பயிற்சி51 பிள்ளைகளும் வெலிகம தொழிற்கல்விக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர் மாத்தறை மாவட்டத்தின் அதரலிய பிரதேச செயலகப்பிரிவில் 71 பிள்ளைகளும் பிடபெத்த பிரதேச செயலகப்பிரிவில் 51 பிள்ளைகளும் வெலிகமவில் 48 பிள்ளைகளும் திக்வெல்லவில் 41 பிள்ளைகளும் தெவிநுவரவில் 40 பிளளைகளும் பஸ்கொடவில் 33 பிள்ளைகளும் மாத்தறையில் 30 பிள்ளைகளும் வெலிபிட்டியவில் 25 பிள்ளைகளும் மாலிம்படவில் 20 பேரும் கிரிந்த- புஹுல்வெல்லில் 20 பேரும் ஹக்மனவில் 18 பேரும் அக்குரஸ்ஸவில் 16 பேரும் கொட்டபொலவில் 14 பேரும் கம்புருபிட்டியவில் 9 பேரும் முலபிட்டியவில் 8 பேரும் திஹகொடவில் 5 பேருமாக மொத்தம் 449 பேர் பாடசாலை செல்லாத மாணவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அதிபர்கள், கிராம சேவையாளர்கள், திவிநெகும அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள், விவசாய ஆய்வு உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப நல மருத்துவமாது, சிவில் பாதுகாப்பு குழுக்கள், கிராமிய சுயேட்சை அமைப்புகள் மற்றும் கிராம மக்களூடாக இப்பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
பாடசாலை செல்லவேண்டிய வயதில் உள்ள பாடசாலை செல்லாத மற்றும் தொடர்ச்சியாக பாடசாலை செல்லாத பிள்ளைகள் அடையாளங்கண்டு உடனடியாக பிரதேச செயலகப்பிரிவுகளில் செயற்படும் ஏனைய சகோதர உதவியாளர்களின் உதவியுடன் பாடசாலை அனுப்ப தான் நடவடிக்கை எடுப்பதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.