ஆக்கிரமிப்பு தாவரங்கள் தொடர்பாக தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்றது.
அரச நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இத்தௌிவுபடுத்தும் நிகழ்வில் ஆக்கிரமிப்பு தாவரங்கள், ஏனைய உயிரினங்கள் என்பன தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது. அரச ஊழியர்களூடாக பொதுமக்கள் மத்தியில் இவ்விடயம் தொடர்பில் தௌிவை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
மகாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் குறித்த தாவரங்கள், விலங்குகளை ஆக்கிரமிப்பை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கையில் சுமார் 82 ஆக்கிரமிப்பு தாவரங்கள் பரவியுள்ளதாகவும் அவை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுருத்தலாக இருப்பதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியாக மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அநுராதபுர மாவட்ட செயலாளர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.