
இச்சாஹித்ய விழாவின் பிரதான உரையை ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் சமன் சந்திர ரணசிங்க ஆற்றவுள்ளார். சாஹித்ய விழாவை முன்னிட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜயதிஸ்ஸ தென்னகோனின் மாதொட புராணய ஆராய்ச்சி நூலும் வௌியிடப்படவுள்ளது.
மேலும், பாரம்பரிய தேசிய கலை, கிராமிய பேச்சுவழக்கு மற்றும் கிராமிய இலக்கியம் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக இச்சாஹித்திய விழாவில் கலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
தென்மாகாண இளைஞர் சேவை, கிராமிய அபிவிருத்தி மற்றும் கலாசார விவகார அமைச்சர் வீரசுமன வீரசிங்க, மாத்தறை மாவட்டச் செயலாளர் ஈ.ஏ.சீ விதானகமாச்சி, கலாசார பணிப்பாளர் அனுஷா கோகுல பிரனாந்து மற்றும் தேசபந்து சிரிசுன கொடகே உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ள இவ்விழாவை கலாசார பொதுச்சபையின் உதவியுடன் மாத்தறை கடவத்சதர பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.