
அரசாங்க திரைப்படப் பிரிவு
அரசாங்க திரைப்பட பிரிவானது இலங்கையின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார நிகழ்வுகளை ஒலி மற்றும் காணொலி ஊடகங்களில் உருவாக்கிய முன்னோடி நிறுவனமாகும்.
குறிப்பாக, 1948 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டில் நடைபெற்ற சமூக, அரசியல் மற்றும் கலாசார நிகழ்வுகளை வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் உருவாக்கி எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் ஒரே ஒரு அரச நிறுவனமாகும். ஆரம்பகாலங்களில் திரைப்பட ஊடகங்கள் மூலம் இவை உருவாக்கப்பட்டன, ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து, டிஜிட்டல் வீடியோ ஊடகங்களில் அறிக்கைகள் மற்றும் செய்து காட்சிகள் உட்பட ஒலி-காணொலி நிகழ்ச்சிகளை உருவாக்கி வரும் அரச நிறுவனமாகும்.


அதன் கீழ் அலகுகள்
திரைப்பட பாதுகாப்பு அலகு

அரசாங்க திரைப்படப் பிரிவினால் தயாரிக்கப்படும் சினெ அறிக்கைகள் மற்றும் செய்தித் திரைப்படங்களை பாதுகாப்பதும் அதற்கான பணிகளை முன்னெடுப்பதும் மிக முக்கியமான பணிகளாகும்.
டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு

பழைய மற்றும் புதிய ஒலி – காணொலி ஊடகங்களுக்கான வீடியோ மற்றும் புகைப்படங்களை எதிர்காலத்திற்கு பாதுகாக்கும் மற்றும் பரிசீலனை செய்யும் பிரிவாக பிரிவாக இது செயல்படுகின்றது.
தொலைபேசி
+94 77 750 6705
+94 70 212 9679
+94 71 209 5371
மின்னஞ்சல்
ஆக்கம் மற்றும் ஒளி செயல்பாட்டு நிலையம்

அரச திரைப்பட பிரிவின் பின்னரான தயாரிப்பு பணிகளைச் செய்கிறது.
இதன் மூலம் அறிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய வீடியோ நிகழ்ச்சிகளை பாதுகாப்பது, நேரடி ஊடக கலந்துரையாடல்களுக்கான பல கேமரா தயாரிப்புகளை மேற்கொள்ளல், ஊடக நிறுவனங்களிடம் ஊடக நடவடிக்கைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான செய்திகளை இணையத்தளம் வழியாக பகிர்தலையும் மேற்கொள்கின்றது.
தொலைபேசி
+94 11 251 4282
வாட்ஸ்அப்
+94 71 441 3426
மின்னஞ்சல்
editgfu@gmail.com
FollowUs
Youtube
Subscribe
கேமரா மற்றும் ஒளி அமைப்பு பிரிவு

இலங்கையின் அரச திரைப்பட பிரிவினால் 1948 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திரைப்பட கேமரா பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் அறிக்கை நிகழ்ச்சிகளுக்கான வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.
தயாரிப்பு அலகு

அறிக்கை நிகழ்ச்சித் திட்டங்களுக்காக ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதோடு, முன்னரான தயாரிப்பு, தயாரிப்பும் பின்னரான தயாரிப்பு போன்ற பணிகளை செய்கின்றது. இதன் மூலம் முழுமையான தயாரிப்பு செயல்முறைகளில் பங்கேற்று நிகழ்ச்சிகளை உருவாக்கி இயக்குகின்றது.
தொலைபேசி
+94 11 251 4267
வாட்ஸ்அப்
+94 70 361 7223
புகைப்பட பிரிவு மற்றும் புகைப்பட நகல்கள் (நெகடிவ்) காப்பகம்

அரசின் அனைத்து முக்கியமான விழாக்கள், நிகழ்வுகள், வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு மாநாடுகள், சனாதிபதி மற்றும் அரச தொடர்பான இராஜதந்திர நடவடிக்கைகளின் புகைப்படங்களை எடுத்துக் கொள்வதுடன், இலங்கையின் சிறப்பை உயர்த்தும் விதமான கலைநயம் மிக்க புகைப்படங்கள், அபிவிருத்தி புகைப்படங்கள் மற்றும் ஏனைய பல்வேறு வகையான புகைப்படங்களை எடுப்பதற்கு செயற்படுகின்றது.
தொலைபேசி
+94 11 251 3545
மின்னஞ்சல்
infophoto@dgi.gov.lk
ஒலி மற்றும் கேட்போர்கூட அலகு
செய்திகள் மற்றும் ஆவணப்படங்கள், அரை விவரிப்பு படங்கள், பேட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கான ஒலி தயாரிப்பைக் கையாளுகிறது. இந்த தயாரிப்புகள் தொடர்பான பதிவுகள், ஒலிகளை நிர்வகித்தல். திரைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஒலிப்பதிவுகள் என்பன பிரதான கேட்போர்கூடத்தில் திரையிடப்படுகின்றன.
தொலைபேசி
+94 11 251 4601
மின்னஞ்சல்
soundgfu@gmail.com