About Us

Image

அரசாங்க தகவல்
திணைக்களம்

அரசாங்க தகவல் திணைக்களம் ஊடக அமைச்சின் கீழ் செயல்படுகிறது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அரசு மற்றும் தனியார் ஊடகங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது இந்தத் திணைக்களத்தின் கடமையாகும். அரசாங்க சேவையின் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதோடு ஊடகங்களின் சுதந்திரத்தையும் பாதுகாத்து ஊடகத்துறையில் நல்லிணக்கமான சூழலை உருவாக்குவதற்கான தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் எதிர்பார்ப்பாகும்.

நாட்டு மக்களுக்கு துல்லியமான தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதி செய்தல், அரசின் அனைத்து தகவல்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுதல், சிறப்பு நிகழ்வுகள் குறித்து மக்களை அறிவுறுத்துதல், தகவல் சேகரித்தல், தரவு சேகரித்தல் மற்றும் அவற்றை மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் செயல்முறையை செயல்படுத்துதல், செய்திகள் மற்றும் தகவல்கள் என முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், செய்திகள் மற்றும் பிற தரவுகளை சேகரித்து பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல் போன்றவை இந்தத் திணைக்களத்தின் கடமையாகும்.

ஊடகவியலாளர்களுக்கு தேவையான பயிற்சி, வசதிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குதல், அவர்களின் தொழில்முறை தரத்தை உயர்த்துவதற்கும் தொழில்முறை பாதுகாப்புக்காகவும் செயல்படுதல், அரசின் தரவை பகுப்பாய்வு செய்வதுடன் தகவல்களை சேகரித்து, ஒலி, காட்சி மற்றும் எழுதப்பட்ட ஆவணங்களை ஊடகவியலாளர்களுக்கு பயன்படுத்துவதற்காக வழங்குதல் போன்றவை இந்தத் திணைக்களத்தின் முக்கிய செயல்பாடுகளில் அடங்கும்.

Image

දැක්ම

ශ්‍රී ලංකාවේ තිරසාර සංවර්ධනය වෙනුවෙන් පුරෝගාමී මෙහෙවරක යෙදෙන වගකීමක් සහිත ස්වාධීන මාධ්‍ය සංස්කෘතියක් ආරක්ෂා කිරීම, පවත්වාගෙන යාම හා මගපෙන්වීම