மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பு பிரிவு

Image

மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பு பிரிவு

25 மாவட்ட ஊடக பிரிவுகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கீழ் 25 மாவட்டங்களில் மாவட்ட ஊடக பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இம் மாவட்ட ஊடக பிரிவுகள் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி நிறுவப்பட்டன.

ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு மாவட்ட ஊடக பிரிவிலும் ஒரு செய்தி அதிகாரி மட்டுமே பணியமர்த்தப்பட்டிருந்தனர். பின்னர், இவ்விணைப்புப் பிரிவுகளின் செயல்திறனை அதிகரிக்க அரசாங்க தரப்பு பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ், ஒரு திட்ட செயற்பாட்டு உதவியாளர் மற்றும் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தர் என ஒவ்வொரு மாவட்ட ஊடக பிரிவுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவுகள் நாட்டின் 25 மாவட்டங்களில் நிலவும் அபிவிருத்திச் செய்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, "மக்கள் தகவல் மையம்" என்ற முகவரியாக செயல்படுகின்றன. அதன் மூலம் அரசின் அபிவிருத்தி செய்திகள் அனைத்தும் ஊடக நிறுவனங்களுக்கும் துரிதமாக பகிரப்படும்.

Image
தொலைபேசி

+94 11 253 759

மின்னஞ்சல்

dmunit1@gmail.com

வாட்ஸ்அப்

+94 71 279 8544

Facebook

JointUs