• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

துறைமுகத் தொகுதி அபிவிருத்திக்கு முதலீடு செய்ய நோர்வே தயார்

இலங்கை துறைமுகத் தொகுதியை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டை மேற்கொள்ள நோர்வே அரசாங்கம் தயாராக உள்ளது என்று இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் தொர்ப்ஜோர்ன் கஸ்டர்ட்சீதர்  Thorbjorn Gaustadsaether  தெரிவித்துள்ளார்.
துறைமுகம் மற்றும் கடல்வள அமைச்சின் ஊடக பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலே இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில். நோர்வே மிகவும் சிறிய நாடு.  இந்தியா, சீனா ஆகிய நாடுகளைப் போன்று பாரிய முதலீடுகள் துறைமுக அபிவிருதிக்கான மேற்கொள்ள முடியாது. எனினும் துறைமுகம் தொடர்பான அறிவு, அனுபவம் எங்களுக்குள்ளது. உயர் தொழில்நுட்ப எம்மிடம் உள்ளது. குறிப்பாக துறைமுகம் மற்றும் அது தொடர்பான  பல விடயங்கள் காணப்படுகின்றன. தொழில்நுட்பம், எரிசக்தி, கொள்கலன் போக்குவரத்து, நிறுத்தற் செயற்பாடு மற்றும் சேவை வழங்கல் என்பன அவற்றுக்கான உதாரணங்கள். இலங்கையில் அவசியமிருப்பின் அந்தந்த துறைகளுக்கு ஏற்ப இந்நாட்டு துறைமுக அபிவிருத்தியில் முதலீடு செய்ய எங்களால் முடியும். குறிப்பாக சுற்றாடல் மாசடைவதை தவிர்ப்பதற்கான நவீன தொழில்நுட்பம் எம்மிடம் உள்ளது. மின்னுற்பத்திக்கான இயற்கை வாயு போக்குவரத்து தொடர்பில் எம்மிடம் அனுபவம் உள்ளது. இத்துறைகளில் எம்மால் முதலீடு செய்ய எம்மால் முடியும்.
 
 
இலங்கை பௌதீக ரீதியாக மிக முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. இதனால் கடற்துறை கேந்திரநிலையமாக இதனை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. உலகச் சந்தையில் நிலவும் போட்டிக்கு முகம்கொடுப்பதற்கான பலம் இலங்கையிடமுண்டு. நோர்வே கப்பல் நிறுவனத்திற்கு இலங்கை குறித்து நன்றாகவே தெரியும். நோர்வே நாட்டின் கப்பல் 19ம் நூற்றாண்டில் இலங்கைக்கு வர ஆரம்பித்தது. இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பல் கைத்தொழில் தொடர்பில் நோர்வே எப்போதும் விழிப்புடன் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
 
சிங்கப்பூர் மற்றும் டுபாய் கடற்பாதைகளின் மத்திய நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியம் என்று அடையாளங்காணப்பட்டுள்ளது. உண்மையில் கப்பற் கைத்தொழில் சார்ந்த அனைவரும் இவ்வலயம் தொடர்பில் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து வருகின்றனர்.  மறு ஏற்றுமதிக்கு இலங்கை மிகவும் பொறுத்தமானதா? இலங்கையில் நங்கூர வசதிகள் முன்னேற்றமடைந்ததாக காணப்படுகிறதா? போன்ற விடயங்கள்  தொடர்பில் அனைவரும் மிகவும் அவதானத்துடன் உள்ளனர். எனவே துறைமுகத்தைப் போன்ற துறைமுக வசதிகளையும் இலங்கை அபிவிருத்தி செய்வது அவசியம். துறைமுகத்திற்கு மேலதிகமாக துறைமுகத்தின் ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்தி மிகவும் அவசியம். உலகின் பல நிறுவனங்களில் சேவைக்காக செலவிடும் நிதி, காலம் என்பவை குறித்து மிகவும் அவதானத்துடன் உள்ளன.
 
இலங்கை துறைமுகம் மற்றும் கடற்சார் துறையில் முன்னோக்கிச் செல்வதற்கு மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இலங்கை கவனம் செலுத்த வேண்டும். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களிலும் இலங்கையருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நோர்வே கப்பல்கள் உலகில் மிகவும் பிரபலமானவை. பல நாடுகளில் இருந்த நோர்வே கப்பற் கம்பனிகளில் பணியாற்றுகின்றனர். இலங்கையருக்கும் அதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும். இலங்கையர் இவ்விடயம் தொடர்பான தமது அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறாயின் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன என்றும் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.
 
முழுமையான நேர்காணலை http://www.portmin.gov.lk என்ற இணையதள முகவரியில் காணலாம்.
 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.