• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

சர்வதேச வெசக் தினத்தை முன்னிட்டு கண்டியில் விசேட பெரஹரா

சர்வதேச வெசக் தினம் இவ்வாண்டு இலங்கையில் நடத்தப்படுவதை முன்னிட்டு எதிர்வரும் மே
மாதம் 14ம் திகதி விசேட கண்டி தலதா மாளிகையில் பெரஹராவொன்றை நடத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சர்வதேச வெசக் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள வௌிநாட்டு பிரதிநிதிகளுக்காக நடத்தப்படவுள்ள இவ்விசேட பெரஹரா நிகழ்வினூடாக இலங்கையின் தனித்துவமான கலாசாரத்தை உலக நாடுகளுக்கு வௌிப்படுத்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதற்கமைய கண்டி மல்வத்த மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரின்  வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைய எசல பெரஹராவைப் போன்றே இப்பெரஹரா கண்டி நகரில் வளம் வரவுள்ளது என்று தலதா மாளிகையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 ஐநாவின் 14வது வெசக் தின கொண்டாட்டம் இம்முறை இலங்கையில் கொண்டாடப்படவுள்ளதுடன் அதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 13ம் திகதி கொழும்பை கேந்திரமாக கொண்டு நடத்தப்படவுள்ள வெசக் தின கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு கண்டி தலதா மாளிகை வளாகத்தில் உற்சவமாக நடத்தப்படவுள்ளது. சுமார் 85 நாடுகளின் பிரதிநிதிகள் விசேட ரயிலினூடாக கொழும்பில் இருந்து கண்டிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
 
தலதா மாளிகையின் வணக்க நிகழ்வுகளின் கலந்துகொள்ளவுள்ள இவ்வௌிநாட்டுப் பிரதிநிதிகள், பௌத்த கலாசாரம் தொடர்பில் நடத்தப்படவுள்ள விசேட மாநாட்டில் கலந்துகொள்வர். அதனைத் தொடர்ந்து தலதா மாளிகையினால் நடத்தப்படும் விடேச பெரஹரவை பார்வையிடுவர். இப்பெரஹரா கண்டி நகரின் வீதிகளில் வளம் வரவுள்ளதுடன்  உள்நாட்டு வௌிநாட்டு பக்தர்கள் இப்பெரஹவை கண்டுகளிக்க வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
 
ஐநாவின் சர்வதேச வெசக் தின விழா முதற்தடவையாக இம்முறை இலங்கையில் கொண்டாடப்படுகிறது. இதற்கு முன்னர் 11 வருடங்களும் தாய்லாந்திலும் இரு தடவைகள் வியட்நாமிலும் நடத்தப்பட்டுள்ளதுடன் தற்போதைய இலங்கை அரசின் வேண்டுகோளுக்கமைய இம்முறை இலங்கையில் நடத்தப்படவுள்ளது.
 
அண்மையில் கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் மேற்கூறப்பட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
 
 மல்வத்த மற்றும் அஸ்கிரிய மஹநாயக்க தேரர்களின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில், பௌத்த சாசன அமைச்சின்  செயலாளர் சந்திரபிரேம கமகே, கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பி. ஹிட்டிசேக்கர, கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.