• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

2018.11.13

2018.11.13 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

 

 
01. 2019ஆண்டிற்கென பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகளைவிநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது  விடயம்)
 
 
இலவச கல்வியைபெரும் மாணவர்களின் கல்வியில் சம நிலையை உறுதிசெய்வதற்காக சுமார் 45 இலட்சம் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைக்கான துணியை வழங்குவதற்கு 1993ம் ஆண்டில் இருந்து இது வரையிலான 25 வருடகாலமாக அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதற்காக சமீபகாலம் முதல் கடைப்பிடிக்கப்பட்ட 'திலினபத்' என்ற நடைமுறைக்கு அமைவாக உள்ளூர் ஆடை தயாரிப்பாளர்களிடம் பாடசாலை சீருடைதுணியை பெற்றுக்கொண்டுமுன்னர் இருந்த வகையில் சீருடைக்கான துணியை வழங்குவதற்காக நன்மை உள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் கீழ் 1 மீட்டர் துணைக்காக சுமார் 50 ரூபாயை சேமிக்க முடியும் என்பதினாலும் உள்ளூர் தயாரிப்பாளர்களிடம் இருந்து துணியைபெற்றுக்கொளவதன் மூலம்  வெளிநாட்டு செலவினத்தையும் சேமிக்க முடியும்  என்பதைக் கருத்திற்கொண்டு 2019ம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கானதுணியைவழங்கும் பொருட்டு கல்வி மற்றும் உயர் கல்விஅமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
 
 
02. உள்ளூராட்சி மன்றங்களின் மேம்படுத்துவதற்காக துறை சார்ந்த  திட்டத்தின்  கீழ் இனாமலுவ கித்துல்ஹிடியாவ சீகிரிய அபரண கலேவல தித்தவெல்கொல்ல ஆகிய பிரதேசங்களுக்கு நீரைவிநியோகித்தல். (நிகழ்ச்சிநிரலில் 25வது விடயம்)
 
உளூராட்சிமன்றங்களைமேம்படுத்துவதற்காக துறை சார்ந்த  திட்டத்தில் - தம்புள்ளநீர்திட்டமுறையின் கீழ் இனாமலுவ கித்துல் ஹிடியாவ சீகிரிய அபரண, கலேவல மற்றும் தித்தவெல்கொல்ல ஆகிய பிரதேச மக்களின் நீர் தேவைக்காக நீர் விநியோகதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இனாமலுவ மற்றும் கித்துல் ஹிடியாவ பிரதேசத்திற்கான நீர் விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கான 492.9 மில்லியன் ரூபாவிற்கான ஒப்பந்தத்தையும் சீகிரியாமற்றும் அபரண பிரதேசத்திற்கான விநியோகத்தை விரிவுபடுத்துவதற்காக 415.3 மில்லியன் ரூபாவுக்குமாக  PND மற்றும் ENC - குழும்ப நிறுவனத்திற்கு வழங்கப்படகியவுள்ளது. கலேவல மற்றும் தித்தவெல்கொல்ல பிரதேசத்திற்கானநீர் விநியோகிக்கும் ஒப்பந்தம் 660.6 மில்லியன் ரூபாவுக்குளுஙசைந Sqire Mechபொறியியலாளர் நிறுவனத்துக்கும் வழங்குவதற்குஅமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைகுழுவின் சிபாரிசுக்குஅமைய வழங்குவதற்காக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்றமற்றும் விளையாட்டுதுறைஅமைச்சர் பைசர் முஸ்தப்பாசமர்ப்பிக்கப்பட்டஆவணத்துக்குஅமைச்சரவைஅங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
03. பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 29வது விடயம்.)
 
கூடுதலான வரிசுமையை தகர்த்தி தேசியதொழில் முயற்சியாளர்களையும் கைத்தொழிற் துறையையும் வலுவூட்டுவதற்கும் விவசாயதுறையை ஊக்குவித்தல் மற்றும் அத்தியாவசிய நுகர்வோரின் பொருட்களுக்கானவிலையைகுறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமும் பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்காகவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய நுகர்வோருக்கான பொருட்களை விலைகுறைத்தல் விவசாயிகள் சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் வறட்சிநிலையுள்ள பிரதேசங்களில் பெண்களினால் பெறப்பட்டுள்ள கடனுக்கு நிவாரணம் வழங்குதல் இரசாயன உரத்தை நிவாரணவிலைக்கு வழங்குதல். கூடுதலானவரியைகட்டுப்படுத்தல். தேசியவிவசாயதொழில் நுட்பவியலாளர் நிர்மாணித்தல். சிறியளவிலானவர்த்தகர்கள் வெளிநாட்டுசேவைக்கான - தொழிற்துறையினருக்குசிறியமற்றும் நடுத்தரஅளவிலான தொழிற்முயாட்சியாளர்களுக்கு வரிநிவாரணம் வழங்குதல் சமூர்த்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் பல்வேறு நிவாரணங்களுக்காக பரிந்துரைவழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாககௌரவபிரதமரும் நிதிமற்றும் பொருளாதார அலுவல்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் 2018.11.01 பிரகடனப்படுத்தப்பட்ட நடைமுறைகளுக்கு தேவையான உடனடி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்டசரத்துக்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தத்தை மேற்கொள்வதற்காக பொருளாதாரஅலுவல்கள் அமைச்சர் என்றரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
 
 
04. 04. 2018.சிறுபோகத்தில் பூச்சுக்கள் புழுக்களினால் ஏற்பட்டவயல்களுக்காக விதைநெல்லை நிவாரணமாக வழங்குதல். (நிகழ்ச்சி நிரலில் 29வது விடயம்.)
 
 
பொலநறுவை மற்றும் அம்பாறைமாவட்டங்களில் 2018 சிறுபோகத்தில் நெல் உற்பத்தியில் பூச்சுக்கள் மற்றும் புழுக்களினால் ஏற்பட்ட பாதிப்பு அதிகரித்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதற்கமைவாக பொலநறுவை மாவட்டத்தில் 18 280 விவசாயிகளின் 34759 ஹெக்டர் விவசாய நிலங்கள் இந்தபூச்சிக்களினால் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அம்பாறை மாவட்டத்தில் 3676 விவசாயிகளின் 7402 எக்ட்டர் வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகமதிப்பீடுசெய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக 2018/2019 பெரும் போகத்திற்காகபொருத்தமானவிதைநெல்லை விலசாயிகள்  பெரும் சிரமத்தைஎதிர்கொண்டுள்ளனர். இதற்கமைவாக பூச்சுகளினால் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு 2018/2019 பெரும் போகத்திற்காகவிதைநெல்லைகொள்வனவுசெய்வதில் ஏற்பட்டபாதிப்புக்குஅமைவாகஒருஏக்கருக்கு 1500 தொடக்கம் 3000 வரையில் விதைநெல்லைகொள்வனவுசெய்வதற்காக நஷ்ட ஈட்டைவழங்குவதற்காகமேதகு ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனஅவர்களும் விவசாயஅமைச்சர் மஹிந்தஅமரவீரஅவர்களும் சமர்ப்பித்தஆவணத்துக்குஅமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
 
 
 
05. எஞ்சியுள்ளமாகாண சபை தேர்தலைநடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 34வது விடயம்.)
 
9 மாகாணசபைகள் மற்றும் 6 மாகாணசபைகளின் உத்தியோகபூர்வகாலஎல்லைநிறைவடைந்துள்ளதனால் விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும். மாகாண சபை உறுப்பினர்களைதெரிவுசெய்வதற்காக தற்பொழுது நடைமுறைபடுத்தப்படும் 2017ம் ஆண்டு இல 17 கீழான மாகாண சபை தேர்தல் (திருத்தம்) சட்டத்தில் திருத்தப்பட்ட 1988 இலக்க 2இன் கீழான மாகாணசபை சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசாரபிரதிநிதித்துவ நடைமுறையின் கீழ் தேர்தலைநடத்துவதற்கு தேவையான வாக்காளர் தொகுதிநிர்ணயபணிகள் இதுவரைநிறைவடையவில்லை. இதற்கமைவாக எதிர்வரும் மாகாண சபை தேர்தல் துரிதமாகநடத்தப்படவேண்டியதேவையைகருத்திற்கொண்டு இம்முறைநடத்தப்படுவதற்குதேர்தலுக்குமாத்திரம் மாகாண சபை தொகுதிமுன்னர் இருந்தவிகிதாசாரபிரதிநிதித்துவமுறையின் கீழ் 25 சதவீதம் அவசியம் பெண்களின் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குதேவையானதிருத்தசட்டத்தைமேற்கொள்வதற்கு மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் பைசர் முஸ்தப்பாசமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவைஅங்கிகாரம் வழங்கியுள்ளது.
 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.