01.அரச நிறுவனங்களில் கட்டிடங்களை மிகவும் சூழலுக்கு பொருத்தமான பசுமையான கட்டிடங்களாக
நிர்மாணிப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல் கோவையை செயற்படுத்தல் (விடய இல. 09)
அரச நிறுவனங்களில் கட்டிடங்களை மிகவும் சூழலுக்கு பொருத்தமான பசுமையான கட்டிடங்களாக நிர்மாணிப்பதற்கு மற்றும் பராமரிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில், சக்தி வளங்களின் பயன்பாடு, நிலையான பூமி திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம், நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற மூலதிரௌவியங்கள் மற்றும் வளங்களின் முகாமைத்துவம், கட்டிடங்களினுள் சூழலியல் தரத்தினை பேணல், முறையான நீர் பயன்பாடு, பசுமையான நவீனமயப்படுத்தல் மற்றும் அவற்றின் சமூக மற்றும் கலாச்சார தாக்கங்கள் ஆகிய துறைகளில் ஊடாக புதிய நிர்மாணங்களில் சூழலுக்கு உகந்த விதத்தில் உள்ளதா என்பதை அளவிடுவதற்கான செயன்முறை மற்றும் அதனை செயற்படுத்துவதற்கு தேவையான நிறுவன கட்டமைப்பு உட்பட அனைத்து வழிகாட்டல்கள் கோவைக்கும் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. புதிய பாடவிதானத்துக்கு அமைவாக சுற்றாடல் கல்வி தொடர்பாக ஆசிரியர்களை அறிவுறுத்தல் (விடய இல. 10)
சூழலியல் மாற்றங்களுக்கு உகந்த முறையில் முகங்கொடுப்பதற்கு ஏதுவான முறையில் புதிய பாட விதானத்தை தயாரிக்கும் போது தரம் 6 தொடக்கம் 11 வரையிலான விஞ்ஞான பாடத்தில் சுற்றாடல் தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சுற்றாடல் துறை தொடர்பாக சரியான அறிவுறுத்தல்களை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் பாடசாலை மாணவச் சமூகத்தினரிடத்தில் மனப்பாங்கு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சுற்றாடல் கல்வி தொடர்பாக அரச ஆசிரியர்களை அறிவுறுத்தம் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களின் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்துக்கு தேவையான வசதிகளை வழங்குதல் (விடய இல. 11)
ரஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களின் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியினை சலுகை நிபந்தனைகளின் அடிப்படையில் ஆஸ்திரியாவின் வங்கியொன்றிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஒப்புதல்களை பெற்றுக் கொள்வதற்கும், அது தொடர்பான கடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கங்களுக்கு இடையில் அபிவிருத்தி ஒத்துழைப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (விடய இல. 12)
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட கொள்கை மாற்றங்களின் விளைவாக, மீண்டும் தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவுஸ்திரேலியா அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு தேவையான மேலதிக நிதியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 13)
அபிவிருத்திக்கான சவூதி நிதியம் (SFD), அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியம் (KFAED) மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியம் (OFID) ஆகியவற்றின் மூலம் திரட்டப்பட்ட நிதி வசதிகளின் கீழ் களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டமானது தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இக்கட்டுமான பணிகளை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் மதீப்பீட்டு செலவு 140.35 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். குறித்த தொகையில் கிட்டத்தட்ட 89.85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த நிதியங்களில் இருந்து கிடைக்கப்ப பெறுகின்றன. அதனடிப்படையில் எஞ்சிய 50.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வேறு அபிவிருத்தி உதவியாளர்களிடத்தில் இருந்து திரட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. குறித்த தொகையில் 16.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைட் நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. சுற்றுலாத்துறையில் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வசதிகளை தாபிப்பதற்கான கருத்திட்டம் (விடய இல.15)
சுற்றுலாத்துறையில் காணப்படும் வியாபார வசதிகளை விருத்தி செய்வதனை இலக்காகக் கொண்டு, 04 வருட காலத்தினுள் 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள சந்தைப்படுத்தல் அபிவிருத்தி வசதிகளை தாபிப்பதற்கான கருத்திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையில் செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. ஒருங்கிணைந்த புத்தளம் சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் (விடய இல. 16)
இலங்கையில் பிரதான சுற்றுலா வலயமாக கற்பிட்டி மற்றும் புத்தளம் களப்பினை சூழவுள்ள பிரதேசத்தை விருத்தி செய்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த புத்தளம் சுற்றலா அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலைத்திட்டமொன்றை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு ஆகியவை இணைந்து 2017 – 2018 ஆகிய இரு வருடங்களுக்குள் செயற்படுத்துவது தொடர்பில் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் 10ஆவது விமானசேவைகள் உடன்படிக்கை மாநாட்டினை இலங்கையில் நடாத்துதல் (விடய இல. 18)
1944ஆம் ஆண்டில் சர்வதேச சிவில் விமானசேவைகள் உடன்படிக்கை (சிக்காகோ உடன்படிக்கை) கைச்சாத்திடப்பட்டது. 1948ம் ஆண்டு ஜுன் மாதத்தில் இலங்கை சர்வதேச சிவில் விமானசேவைகள் உடன்படிக்கையின் தரப்பினராக உருவாகப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பின் அங்கத்தவராக உருவாக்கம் பெற்றது. விமானசேவைகள் கலந்துரையாடல் தொழிற்பாட்டில் வினைத்திறனை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு ஒரே இடத்தில் பல்தரப்பு விமான போக்குவரத்துச் சேவை உடன்படிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் கூட்டங்களுக்காக அமைவிட மையமொன்றினை வழங்குவதற்கு சர்வதேச சிவில் விமானசேவைகள் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக வருடா வருடம் ஒரு அங்கத்துவ நாடொன்றின் மூலம் உபசரணை வழங்குகின்ற விமான சேவைகள் உடன்படிக்கை மாநாடு (ஐஊயுN) நடத்துவதற்கு அவ்வமைப்பு நடவடிக்கையெடுத்துள்ளது. இந்த வகையில் 2017ம் ஆண்டுக்கான மாநாட்டை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 04 – 08 வரை இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாநாட்டினை இங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09.பலஸ்தீன் நாட்டின் தூதரகத்திற்கு காணித்துண்டொன்றைக் குறித்து ஒதுக்குதல் (விடய இல. 20)
பலஸ்தீன் நாட்டின் தூதரகத்திற்கு காணித்துண்டொன்றைக் கொழும்பு 07, ஹேவா அவெனியூவில் அமைந்துள்ள பூமிப்பகுதியில் இருந்து ஒதுக்கிக் கொள்வதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ரஷ்யா தொழில் மற்றும் சமூக உறவுகள் தொடர்பான அகடமி மற்றும் இலங்கையின் தேசிய தொழிற் கற்கைகள் நிறுவனத்திற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 21)
தொழில் துறை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிகளுக்கு தேவiயான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும், தொழில் கல்வி துறையில் இணை வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கும் அவகாசத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ரஷ்யா தொழில் மற்றும் சமூக உறவுகள் தொடர்பான அகடமி மற்றும் இலங்கையின் தேசிய தொழிற் கற்கைகள் நிறுவனத்திற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பு சம்பந்தமான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 22)
உயர் கல்வித் துறையில் கல்விசார் ஒத்துழைப்பை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கையின் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கல்வி – உயர் கல்வி அலுவல்கள் அமைச்சுக்குமிடையில் புரிந்துணர்வு ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் கூட்டிணைதல் தொடர்பில் இலங்கைக்கும் ஈரானிற்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் (விடய இல. 24)
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தில் கூட்டிணைதல் தொடர்பில் இலங்கைக்கும் ஈரானிற்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தில், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 – 17 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளவுள்ள தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் விஞ்ஞான தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கை புற்று நோய் சங்கத்திற்கான வருடாந்த மானியத்தை அதிகரித்தல் (விடய இல. 27)
1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை புற்று நோய் சங்கம், புற்று நோயால் ஏற்படும் அழிவுகரமான விளைவுகளிலிருந்து இலங்கையை விடுவிக்கும் நோக்குடன் அர்ப்பணிப்புடன் உழைக்கும் முதன்மையான தன்னார்வ நிறுவகம் ஒன்றாகும். இலங்கை புற்றுநோய் சங்கமானது நோயாளர்களின் பராமரிப்பு தொடர்பில் வருடாந்தம் ஒரு தொகை மானிய தொகையை வழங்கி வருகின்றது. காலத்தின் தேவைக்கிணங்க குறித்த வருடாந்த மானியத்தை 2017ம் ஆண்டிலிருந்து ரூ. 550,000.00 விலிருந்து ரூ. 2,000,000.00 வரை அதிகரிப்பது தொடர்பில் சுகாதார, போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. 2007ம் ஆண்டு 11ம் இலக்க நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளல் (விடய இல. 28)
இலங்கையில் டெங்கு நோயினை தடுப்பது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் குறித்த பணியினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு 2007ம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் சுகாதார, போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. அரசாங்க மற்றும் தனியார் பங்குடைமை பிரிவைத் தாபித்தல் (விடய இல. 31)
நாட்டினுள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அரசாங்க மற்றும் தனியார் பங்குடமை கருத்திட்டங்களின் செயற்பாடுகளின் போது ஒத்துழைப்பை வழங்குதல், ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் வசதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக மத்திய பிரிவொன்றை ஏற்படுத்தும் தேவையை உணர்ந்து நிதியமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்க மற்றும் தனியார் பங்குடைமை பிரிவைத் தாபிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க மற்றும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு புதிய கட்டிமொன்றை நிர்மாணிப்பதற்கு மேலதிக இடமொன்றை வழங்குதல் (விடய இல. 32)
தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தில் தற்போது காணப்படும் இடப்பற்றாக்குறையை நிவர்த்திக்கும் நோக்கில் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக அந்நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ள விவசாய அமைச்சிக்கு சொந்தமான 45 பேர்ச்சஸ் காணிப் பகுதியை தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழிற் பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க மற்றும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோல் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவை மாவத்தையில் அமைந்துள்ள காணியொன்றை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 36)
திவிநெகும திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தை நிர்மாணிப்பதற்காக பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவை மாவத்தையில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான நிலப்பகுதியை விடுவிப்பதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. கரதியான மற்றும் முதுராஜவெல பிரதேசத்தில் நகர திண்ம கழிவகற்றல் முகாமைத்துவ வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 37)
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் ஒன்று சேரும் குப்பைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக சாம்பலாக்குதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகள் மூலம் மின்னுற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் இரண்டினை கரதியான மற்றும் முதுராஜவெல ஆகிய பிரதேசங்களில் செயற்படுத்த பிரேரிக்கப்பட்டுள்ளது. அரச – தனியார் பங்குடைமையின் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்த இருப்பதோடு அதற்காக அரசாங்கத்தின் கொள்முதல் செயன்முறையினை பயன்படுத்தி தெரிவு செய்யப்படுகின்ற முதலீட்டாளருக்கு இப்வொப்பந்தத்தை வழங்குவதற்கு பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. மாத்தளை மாவட்டத்தின் கொடிகமுவ வாவியை விருத்தி செய்தலும், புதுப்பித்தலும் (விடய இல. 40)
மாத்தளை மாவட்டத்தின் நாஉல பிரதேசச் செயலாளர் பிரிவினுள் கொடிகமுவ வாவி கிராமிய நீர்ப்பாசனத் திட்டம் 1970ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. வாவியின் கொள்ளளவை 45 ஏக்கர் அடியிலிருந்து 202 ஏக்கர் அடி வரை மேலுயர்த்துவதால் நாஉல பிரதேசத்தின் தபகல்ல, பபரகஹவத்தை மற்றும் ஹலபகஹவத்தை ஆகிய கிராமங்களில் வசிக்கும் 162 விவசாய குடும்பங்களுக்கு நீரினை வழங்குவதனை உறுதி செய்யும் நோக்கில் 165.9 ரூபா மதிப்பீட்டு செலவில் கொடிகமுவ வாவியை விருத்தி செய்தவதற்கும், புதுப்பிப்பதற்குமான வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. 1946ம் ஆண்டு 32 ஐ உடைய நீர்ப்பாசனக் கட்டளைச் சட்டத்தை இன்றைய தேவைக்கேற்பத் திருத்தியமைத்தல் (விடய இல. 41)
நீர்ப்பாசன திணைக்களத்தின் பணியினை செவ்வனே நிறைவேற்றுதற்காக, இன்றைய தேவைக்கேற்ப 1946ம் ஆண்டு 32 ஐ உடைய நீர்ப்பாசனக் கட்டளைச் சட்டத்தினை ஆராய்ந்து முன்வைக்கப்பட்ட சிபார்சுகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள அறிஞர் குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் கட்டளைச்சட்டத்தை திருத்தியமைப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. தற்பொழுது ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ள உலை எண்ணெய் மின்னுற்பத்தி நிலையங்களின் ஒப்பந்த காலத்தை 06 மாத்தினால் நீடித்தல் (விடய இல. 48)
தற்பொழுது ஒப்பந்த காலம் முடிவடைந்துள்ள எம்பிலிபிட்டிய யுஊநு பவர் மின்னுற்பத்தி நிலையம், மாத்தறை யுஊநு பவர் மின்னுற்பத்தி நிலையம் மற்றம் புத்தளம் ஹெலதனவி மின்னுற்பத்தி நிலையம் போன்ற உலை எண்ணெய் மின்னுற்பத்தி நிலையங்களின் ஒப்பந்த காலத்தை 06 மாத்தினால் நீடிப்பது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. தொடர்த்தேர்ச்சியான மின்சார வழங்கலை உறுதி செய்யுமுகமாக 60 மெகாவொட் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்தல் (விடய இல. 50)
தொடர்த்தேர்ச்சியான மின்சார வழங்கலை உறுதி செய்யுமுகமாக 06 மாத கால குறுகிய மின்னுற்பத்திக்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், திறந்த விலை மனுக்கோரலின் ஊடாக 60 மெகாவொட் கொள்ளளவினை கொண்ட ஜெனரேட்டர்களை கொள்வனவு செய்வது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. உமா ஓயா பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் தலைமைச் சுரங ;கத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாகப் பாதிப்புக்குள்ளான வீட்டு உரிமையாளர்களுக்கு அவசர அனர்த்த நிலையின் கீழ் நிவாரணங்களை வழங்குதல் (விடய இல. 51)
உமா ஓயா பல் நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் தலைமைச் சுரங ;கத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாகப் பாதிப்புக்குள்ளான வீட்டு உரிமையாளர்களுக்கு அவசர அனர்த்த நிலையின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ழுமுமையாக பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்காக புதிய வீடுகளை அமைத்து கொடுத்தல், குடிநீர் வசதிகளை இலவசமாக செய்து கொடுத்தல் போன்ற சலுகைகளை துரித கதியில் செய்து கொடுப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. 2017ம் ஆண்டின் அரசாங்க கடன் நிகழ்ச்சித் திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 53)
2017ம் ஆண்டின் அரசாங்க கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் 1500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் இலங்கை அபிவிருத்தி முறிகளை விநியோகிப்பது தொடர்பில் நிதி அமைச்சர் கௌரவ வரி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. 2013ம் ஆண்டின் 2ம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தை திருத்தச் செய்தல் (விடய இல. 54)
பொலிசாரால் எவரேனும் சந்தேக நபரொருவரிடமிருந்து கூற்றுக்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர், சட்டத்தரணி ஒருவரை அணுகும் உரிமையை அச்சந்தேக நபருக்கு வழங்கி 2016 ஆகஸ்ட் மாதத்தில் சட்டமூலமொன்று தயார் செய்யப்பட்டது. எவ்வாறாயினும் இவ்விடயம் தொடர்பாக ஆர்வமுடைய நபர்களால் விளக்கங்களின் காரணமாக இவ்வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆதலால், சட்டமுறையான அலுவல்கள் (ஊழல் விரோதி) மற்றும் ஊடகம் பற்றிய பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டவாறு இவ்விடயம் தொடர்பாக மேலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வரைவொன்றை தயார் செய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றும் சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் மற்றும் இவ்விடயம் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற வேறு நபர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதனடிப்படையில் அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட சகலரும் ஏற்றுக் கொள்ளும் வரைவொன்று தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேக நபர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த வரைவுக்கு அமைவாக சட்டவாக்கங்களை வரைவதற்காக சட்டவரைஞருக்கு அறிவுரைகளை வழங்குவதற்கும், அவ்வாறு தயாரிக்கப்படுகின்ற சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு உரித்தான கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பு (விடய இல. 56)
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி பயங்கரவாத எதிர்ப்பு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட 'கொள்கைகள் மற்றும் சட்ட கட்டமைப்பினை', தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறை மேற்பார்வை செயற்குழுவின் சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்காக அதன் செயற்குழுவுக்கு முன்வைப்பதற்கும், அச்சட்ட கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான சட்ட வரைபொன்றை தயாரிக்கும் பணியினை ஆரம்பிப்பது தொடர்பிலும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.