01.பெண்கள் இராணுவ படையணியின் பயன்பாட்டுக்காக புதிய கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 07)
பெண்கள் இராணுவ படையணியின் பயன்பாட்டுக்காக புதிய கட்டிடம் ஒன்றை 94 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.
02. பனாகொடை இராணுவ குடியிருப்பின் பிரதான கழிப்பறை பகுதியை நிர்மாணித்தல் (விடய இல. 08)
பனாகொடை இராணுவ குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கழிவறைத் தொகுதி தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளமையினால், அதனை மீள புனரமைப்பு செய்வதற்கு பதிலாக புதிய கழிப்பறை தொகுதியொன்றை 80 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. இலங்கை இராணுவத்திற்காக விடுதி வசதிகளை வழங்குதல் (விடய இல. 09)
இலங்கை இராணுவத்திற்கான நிரந்தர விடுதி வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் ஒன்றை, 239.12 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நாராஹேன்பிட்ட, மெனிங் நகரில் அமைந்துள்ள, இலங்கை இராணுவத்தினருக்கு உரித்தான பூமி பகுதியில் நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. எதிர்கால அபிவிருத்தி/ திட்டமிடல் தொடர்பில் பயன்படுத்தத்தக்க அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி திட்டங்கள் (விடய இல. 10)
எதிர்வரும் 30 ஆண்டு காலப்பகுதியினுள் நீர் தேவையினை மற்றும் பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்ளும் நீர் அளவினை கருத்திற் கொண்டு, 'நீர் பாவனை தொடர்பிலான தேசிய திட்டம்', திருத்தியமைக்கப்பட்ட மகாவலி நீர் வளங்கள் அபிவிருத்தி திட்டம்' 'முன்தன் ஆற்று களப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த நீர் வளங்கள் அபிவிருத்தி திட்டம்' ஆகிய நீர் வளங்கள் திட்டங்கள் மூன்றினையும், இலங்கையில் நீர் வளங்கள் துறை அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு நிர்வனத்துக்கும் வழிகாட்டல்களாக பயன்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் கீழ் வைப்பது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. இரத்தினக்கற்கள் மற்றும் தங்கநகைகள் தொழிற்றுறையுடன் இணைந்ததான திறன்கள் அபிவிருத்தி பயிற்சி வேலைத்திட்டம் (விடய இல. 11)
பல்வேறு நோக்கங்களை அடைந்துக் கொள்ளும் நோக்கில் இரத்தினக்கற்கள் மற்றும் தங்கநகைகள் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தினை விருத்தி செய்வது தொடர்பில், அந்நிலையத்தின் ஊடாக வழங்கப்படும் பயிற்சி அவகாசங்களை விருத்தி செய்வதற்காக திறன்கள் அபிவிருத்தி பயிற்சி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல.14)
இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் சுற்றுலா துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 – 15 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தஜிகிஸ்தான் குடியரசின் ஜனாதிபதி அவர்களின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 15)
தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் அரசியல் ஆலோசனைகள் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 – 15 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தஜிகிஸ்தான் குடியரசின் ஜனாதிபதி அவர்களின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் பதில் வெளிவிவகார அமைச்சர் கௌரவ கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் விளையாட்டு மேம்பாடு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் (விடய இல. 52)
இலங்கை மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் விளையாட்டு மேம்பாடு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 – 15 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தஜிகிஸ்தான் குடியரசின் ஜனாதிபதி அவர்களின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கையில் சிறுவர் தொழிலாளரை ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கை (விடய இல. 16)
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையினை மீள் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் ஒழுங்கின் கீழ் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதை முழுமையாக ஒழிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. அவசரகால நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களுக்காக வேண்டி தற்காலிகமாக வசிப்பதற்கு உகந்த பாதுகாப்பான கேந்திர நிலையம் ஒன்றினை ஸ்தாபித்தல் (விடய இல. 17)
அவசரகால நிலைமைகளின் போது பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களுக்காக வேண்டி தற்காலிகமாக வசிப்பதற்கு உகந்த பாதுகாப்பான கேந்திர நிலையம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்காக, பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள, பலங்கொடை தோட்ட கம்பனிக்கு உரித்தான அறை ஏக்கர் காணியினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சிக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிற்காக கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 19)
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவிற்காக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு சீன மக்களரசு நிதி ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் சீன மக்களரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. முன்மொழியப்பட்டுள்ள ஹொரண தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக மில்லேவ கூட்டு தொழில் கிராமத்தை ஸ்தாபித்தல் (விடய இல. 22)
முன்மொழியப்பட்டுள்ள ஹொரண தொழிற்பேட்டை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக மில்லேவ கூட்டு தொழில் கிராமத்தை அரச-தனியார் இணை அனுசரனையுடன் ஸ்தாபிப்பதற்கும், அதற்கு தேவையான காணிப்பகுதியினை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வதற்கும், பாரிய நகர மற்றம் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. உடுப்பு, டெல்ப், பாதகல் மற்றும் சலே ஆகிய பிரதேசங்களில் பல்நோக்கு மீன்பிடி துறைமுகங்களை அமைத்தல் (விடய இல. 27)
உடுப்பு, டெல்ப், பாதகல் மற்றும் சலே ஆகிய பிரதேசங்களில் பல்நோக்கு மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எவ்வித கொடுப்பனவும் அறவிடாத முறையில் தயாரிப்பது தொடர்பில் கொரியா நிறுவனம் ஒன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு மீன் பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. களனி கங்கையில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு அணை விருத்தி செய்தல் (விடய இல. 32)
பழுதடைந்த நிலையில் காணப்படும் களனி கங்கையில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு அணையினை மறுசீரமைக்கும் நோக்கில், களனி கங்கையில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு அணை அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை 1,000 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்வது தொடர்பில் நீர்ப்பாசன மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் கௌரவ விஜித் விஜய முனி சொய்சா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினை ஸ்தாபித்தல் (விடய இல. 39)
காலத்தின் தேவையினை உணர்ந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு 2014ம் ஆண்டே அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட போதும், நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய நிர்மான பணிகளை துரித கதியில் ஆரம்பிப்பது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. கொழும்பு தேசிய பெருந்தெருக்கள் வேலைத்திட்டம் - கோட்டை – போபே (பீ240) வீதியினை கொடகமையிலிருந்து போபே வரையில் விருத்தி செய்தல் (விடய இல. 46)
கொழும்பு தேசிய பெருந்தெருக்கள் வேலைத்திட்டம் - கோட்டை – போபே (பீ240) வீதியினை கொடகமையிலிருந்து போபே வரையில் விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. கொழும்பு தேசிய பெருந்தெருக்கள் வேலைத்திட்டம் - கோட்டை – தலகல (பீ239) வீதியினை கொட்டாவையிலிருந்து மொரகஹஹேன வரையில் விருத்தி செய்தல் (விடய இல. 51)
கொழும்பு தேசிய பெருந்தெருக்கள் வேலைத்திட்டம் - கோட்டை – தலகல (பீ239) வீதியினை கொட்டாவையிலிருந்து மொரகஹஹேன வரையில் விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. 'ரஜரட்ட நவோதயம்' ஜனாதிபதி வேலைத்திட்டத்தின் - 'பிபிதெமு பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 2016 – 2020 பிரிவின் கீழ் வீதி அபிவிருத்தி ஒப்பந்தங்கள் மூன்றினை வழங்குதல் (விடய இல. 48)
ஹபரன – மட்டக்களப்பு வீதியின் (பீ529) பொலன்னறுவை நகர பிரதேசத்தின் 7.5 கிலோ மீற்றர் தூரத்தினை 04 ஓடுபாதைகளாக அபிவிருத்தி செய்தல், தபுள்ளை – பகமுன – கலகஹவெல வீதியின் ஒருபகுதி, மரதன்கடவலை - ஹபரன – திரிக்கொன்டியாமடு வீதியின் ஒரு பகுதி ஆகியவற்றை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் கௌரவ லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. 2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிடல் (விடய இல. 53)
2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதியிடலுக்கான பல்வேறு அனுகுமுறைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதனடிப்படையில் 2017ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட கடன் தொகையினை பெற்றுக்கொள்வதற்கான வறையறைகளினுள், வெளிநாட்டு நாணய கடன் வசதிகளை திரட்டிகொள்வது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் உள்ளடங்கிய நெறிப்படுத்தும் குழுவொன்றினையும், தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்றினையும் நியமிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. உத்தேச புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக இரு மின்சார செலுத்துகை மார்க்கங்களை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தல் (விடய இல. 54)
உத்தேச புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகளுக்காக கொலன்னாவ – களனிதிஸ்ஸ மின்சார செலுத்துகை மார்க்கம் மற்றும் பியகம - களனிதிஸ்ஸ மின்சார செலுத்துகை மார்க்கம் ஆகியவற்றை இடமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.