01.அரச – தனியார் இணை வியாபார ஒத்துழைப்பின் மூலம் உள்ளக விமான சேவை ஒன்றை ஆரம்பித்தல் (விடய இல. 08)
அரச – தனியார் இணை வியாபார ஒத்துழைப்பின் மூலம் உள்ளக விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை விமான படையினருடன் இணைந்து அவ்வாறான இணை வியாபார ஒத்துழைப்பினை வழங்குவதற்கு உகந்த முதலீட்டாளர் ஒருவரை தெரிவுசெய்யும் நோக்கில் போதுமான நிதிவசதிகளை கொண்ட தனியார் துறையினரிடம் இருந்து யோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் முன்வைத்த யோசனைகளை பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சின் அடிப்படையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. தேசிய பாதுகாப்பு கல்லூரியினை ஸ்தாபித்தல் (விடய இல. 09)
பல்வேறு நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் தேசிய பாதுகாப்பு கல்லூரியினை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அக்கல்லூரியினை கொழும்பில் அமைப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து, தற்போது பாவனையற்ற, இதற்கு முன்னர் சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தி வந்த 'மும்தாஸ் மஹால்' சூழலினை ஏற்றாற் போல் மறுசீரமைப்பு செய்து குறித்த கல்லூரியினை அமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்காக தொழில் பயிற்சி பெற்றுக் கொடுக்கும் ஹெதல 'இராணுவ வள மத்திய நிலையத்தினை' விருத்தி செய்தல் (விடய இல. 10)
ஹெதல பகுதியில் அமைந்துள்ள இராணுவ வள மத்திய நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை பயன்படுத்தி தற்போது 09க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி பாடநெறிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் புதிய கட்டிடங்கள் 05 இனை நிர்மாணித்து தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதன் மூலம் குறித்த பாடநெறி தொகையினை 15 ஆக உயர்த்தி, முறையான தொழிற் பயிற்சி மத்திய நிலையமாக 'இராணுவ வள மத்திய நிலையத்தினை' விருத்தி செய்வது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. விமான நிலையத்தினுள் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பதை தடை செய்தல் (விடய இல. 12)
பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வளாகத்தில் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பவர்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற முறையாக அனுமதி பெறாது போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற சட்ட வீரோத செயற்பாடுகளினால் பயணிகள் மாத்திரமல்லாமல் விமான நிலையம் மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனங்கள் பாரியளவு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. அந்நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய சட்டத்தில் போதியளவு விதிமுறைகள் காணப்படாத காரணத்தினால் விமான நிலைய வளாகத்தில் பல்வேறு நபர்களினால் மேற் கொள்ளப்படும் வாடிக்கையாளர்களை தேடிக் கொடுப்பதை தடுப்பதற்காக 2010ம் ஆண்டு 14ம் இலக்க சிவில் விமான சேவை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. மேல் மாகாண பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் வழங்கல் வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 13)
மேல் மாகாண பிரதேசங்களில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் வழங்கல் வேலைத்திட்டங்களை செயற்படுத்தும் நோக்கில் மேல்மாகாணத்தில் கொழும்பு மற்றும் நெருக்கடியான பிரதேசங்கள், மீரிகம தொழில் உப நகரம், மீரிகம முன்மொழியப்பட்டுள்ள விமான நகரம், திவுலபிட்டிய, ஹோமாகம, ஹொரண ஆகிய சூழவுள்ள பிரதேசங்களை உள்ளடக்கும் அடிப்படையில் புதிய நீர் வழங்கல் திட்டங்கள் 05இனை செயற்படுத்துவதற்கு தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்வது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. நோய் தொற்று தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தொற்றுகளைத் தடுப்பதற்குமான சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல.15)
சர்வதேச போக்குவரத்து, வர்த்தக என்பவற்றினால் சர்வதேச நோய்கள் தொடர்பில் பூரண பாதுகாப்பு தந்திரோபாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்கு இணங்க நோய் தொற்று தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தொற்றுகளைத் தடுப்பதற்குமான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சட்ட வரைஞருக்கு பணிப்புரை வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. தேசிய லொத்தர் சபைக்காக புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல் (விடய இல. 16)
தேசிய லொத்தர் சபைக்காக புதிய கட்டிடம் ஒன்றை அச்சபைக்கு உரித்தான கொழும்பு 02, வொக்சோல் வீதியில் காணப்படும் இடத்தில் நிர்மாணிப்பது தொடர்பில் நிதியமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. இலங்கை ஜேர்மன் தொழில் பயிற்சி நிலையத்துக்காக மாணவர் விடுதி ஒன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 18)
மிகையான மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் 05 மாடிகளைக் கொண்ட மாணவர் விடுதியொன்றினை 280 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தெஹிவளை, அத்திடிய பிரதேசத்தில் அமைப்பது தொடர்பில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. மேல் மாகாண வலயத்தில் பாரிய நகர அபிவிருத்திக்கு தேவையான புதிய உபாய முறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல் (விடய இல. 19)
மேல் மாகாண வலயத்தில் பாரிய நகர அபிவிருத்தி தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீதி தொகுதியினை விருத்தி செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
• பேஸ்லைன் வீதியினை காலி வீதி வரைக்கும் நீளச் செய்தல்
• தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் பொல்தூவ – கொஸ்வத்தை வீதியினை கொலன்னாவ ஊடாக களனி வரை நீட்டி இணைத்தல்.
• 120 பஸ் வீதியினை பாமங்கட பாலத்திலிருந்து டிபிள்யு.ஏ.சில்வா மாவத்தை வரை விரிவுபடுத்தல்
• மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து மாஹேனவத்த விஞ்ஞான மற்றும் தொழிலநுட்ப நகரம் வரையில் துரித போக்குவரத்து வீதியொன்றை நிர்மாணித்தல்.
• கொஹுவல முச்சந்தி சூழல் மற்றும் காசல் வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள புகையிரத நிலையங்களுக்கு அருகில் புதிய மேம்பாலங்களை நிர்மாணித்தல்.
• பத்தரமுல்லை,கட்டுநாயக, கடவத்தை, மொரடுவை மற்றும் பானந்துரை ஆகிய நகரங்களுக்கு அருகில் புதிய பல்வகை போக்குவரத்து மத்திய நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் நகரங்களுக்கு பேரூந்து போக்குவரத்தினை முறைப்படுத்தல்.
• களனி பாலத்தில் இருந்து ஒருகொடவத்தை ஊடாக ராஜகிரிய வரை மேலால் ஓடக்கூடிய முன்மொழியப்பட்டுள்ள மேம்பாதையினை பத்தரமுல்லை நிர்வாக நகரத்தினை உள்ளடக்கும் வகையில் வெளிச்சுற்றுவட்டம் வரை நீட்டுதல்.
இங்கு சிலவற்றை மேற்கொள்வதற்காக உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் மூலம் ஆரம்ப வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையின் மூலம் கவனத்திற் கொள்ளப்பட்டது.
திண்ம கழிவு முகாமைத்துவம்
• தெரிவு செய்து வேறுபடுத்தும் அல்லது தகனம் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகராட்சி திண்ம கழிவுகளை வெளியேற்றும் தொகுதியினை மேலும் விருத்தி செய்தல்.
தேவையான நீர் வழங்கலினை உறுதி செய்தல்
• களனி கங்கையின் கிளையாறாக காணப்படும் சீதாவக்கை ஆற்றுக்கும் வீ ஓயாவுக்கும் அருகில் பாரிய நீர் நிலைகளை அபிவிருத்தி செய்தல்.
• கழிவு நீரினை மீள் சுழற்சி செய்து குடிநீர் தேவைக்கு அல்லாமல் பிற தேவைகளுக்கு பயன்படுத்தல்
• மின் கேள்வி குறையும் நேரங்களில் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தினை பெற்றுக் கொண்டு கடல் நீரின் உப்புத்தன்மையினை அகற்றல்.
இதற்கு மேலதிகமாக இது தொடர்பான இன்னும் பல விடயங்களை நிர் வளங்கள் சபையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சரவையின் மூலம் கவனத்திற் கொள்ளப்பட்டது.
10. இலங்கை அமரபுர நிகாயாஹிவுர்த்தி பங்களிப்புச் சபை தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக பூமியொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 20)
இலங்கை அமரபுர நிகாயாஹிவுர்த்தி பங்களிப்புச் சபை தலைமையகத்தை நிர்மாணிப்பதற்காக தலபத்பிட்டிய, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான ரூட் 02 பர்ச்சஸ் 4.2 இடப்பகுதியினை, இலங்கை அமரபுர நிகாயாஹிவுர்த்தி பங்களிப்புச் சபைக்கு இலவச கொடுப்பனவின் மூலம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. தடெல்ல, மாவட்ட விளையாட்டு தொகுதியினை நிர்மாணிப்பதற்காக பூமியொன்றினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 22)
தடெல்ல, மாவட்ட விளையாட்டு தொகுதியினை நிர்மாணிப்பதற்கு தேவையான தடெல்ல பிரதேசத்தில் காணப்படுகின்ற 17 ஏக்கர் பூமி பகுதியினை தமதாக்கி கொள்வதற்கு தேவையான 400 மில்லியன் ரூபாய் நிதியினை திறைசேரியில் இருந்து பெற்றுக் கொள்வது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி கமகே ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. மின்மானி பிற்சேர்க்கை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை ஆரம்பித்தல் (விடய இல. 25)
மின்மானி பிற்சேர்க்கை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றினை இலங்கை மின்சார சபைக்கு உரித்தான இலங்கை ஆற்றல்கள் தனியார் நிர்வனத்தின் மூலம் கேகாலை மாவட்டத்தின், கலிகமுவ தொழில் வலயத்தில் அமைப்பதற்கும், அதன் தயாரிக்கப்படுகின்ற மின்மானி பிற்சேர்க்கைகளை, இலங்கை மின்சார சபைக்கும், இலங்கை மின்சார தனியார் நிர்வனத்துக்கும் வழங்குவது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீளப்புத்தாக்க சக்தி வளங்கள் அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்தின் வீடுகளினை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து பாதுகாத்தல் (விடய இல. 31)
சொபாசிறிபுர வீடமைப்பு திட்டத்தின் வீடுகளினை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு தேவையான நிதியினை திறைசேரியில் இருந்து ஒதுக்கி கொள்வதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. இலங்கையர்களை மலேசியாவில் வேலைவாய்ப்புக்களில் அமர்த்துவது தொடர்பிலான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை (விடய இல. 35)
புலம்பெயர் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு 2015ம் ஆண்டில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. பின்னர் முன்வைக்கப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசிய அரசாங்கத்தின் மனித வள அமைச்சுக்கும் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்தும் பல்லின மற்றும் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய முன்மாதிரி தேசிய பாடசாலையொன்றினை நிர்மாணித்தல் (விடய இல. 36)
பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்தும் பல்லின மற்றும் மும்மொழிக் கல்வியுடன் கூடிய புதிய முன்மாதிரி தேசிய பாடசாலையொன்றினை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிர்மாண பணிகளுக்காக 1,200 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தொகையில் 900 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 300 மில்லியன் ரூபாய்களை இந்தியா அரசாங்கம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கும், கல்வி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் குறித்த நிர்மாணப்பணிகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. காலி வெகுணகொட 'நில செவன' வீடமைப்புத் திட்டத்தின் 100 வீடுகளை இலங்கை பொலிசுக்கு பெற்றுக் கொள்ளல் (விடய இல. 39)
காலி வெகுணகொட 'நில செவன' வீடமைப்புத் திட்டத்தின் 100 வீடுகளை காலி பிரதேசத்தில் பணிபுரியும் வீடு தேவையுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கார்ஜன் போன்ற பதவிகளை வகிப்போருக்கு வழங்குவதற்காக 333 மில்லியன் ரூபாய் திறைசேரி நிதியினை இலங்கை பொலிசுக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. இலங்கை போக்குவரத்து சபைக்காக 40-46 ஆசனங்களை கொண்ட 1000 பேருந்துகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 42)
இலங்கை போக்குவரத்து சபையின் 1000 பழைய பேரூந்துகள் பழுதுபார்ப்பதற்கு பதிலாக 40-46 (2∙2) ஆசனங்களைக் கொண்ட 1000 பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கட்டிடத்தொகுதியை தாபித்தல் (விடய இல. 43)
துஐஊயு அமைப்பினால் நிதியுதவி வழங்கும் மேற்கூறப்பட்ட வேலைத்திட்டத்தின் ஆலோசனை சேவையினை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையின் மூலம் நியமிக்கப்பட்ட ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. பதுளை – செங்கலடி வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம் - பதுளையிலிருந்து பஸ்ஸர விரையிலான மற்றும் பஸ்ஸரயிலிருந்து லுணுகல வரையிலான வீதித்தொகுதி (விடய இல. 44)
ஓபெக் அமைப்பினால் நிதியுதவி அளிக்கப்படும் மேற்கூறப்பட்ட கருத்திட்டத்தின் கீழ் பதுளையிலிருந்து பஸ்ஸர விரையிலான 20 கி.மீ தூரம் மற்றும் பஸ்ஸரயிலிருந்து லுணுகல வரையிலான 21 கி.மீ. தூரம் ஆகியவற்றை விருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகை குழுவின் சிபார்சின் பெயரில் ஒப்படைப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. தங்காலை, அங்குனுகொலபெலஸ்ச மற்றும் மித்தெனிய பிரதேசத்தில் பகுதியளவில் முடிவுற்ற செயல்திட்டங்களை முழுமைப்படுத்தல் (விடய இல. 46)
தங்காலை மற்றும் அங்குனகொலபெலஸ்ச ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட வர்த்தக தொகுதிகளின் நிர்மாண பணிகள், மித்தெனிய நகர அபிவிருத்தியின் கீழ் பாதசாரிகள் ஒழுங்கையினை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களின் மிகுதியினை போட்டித் தன்மையான கேள்வி மனு கோரல் முறையினை கடைப்பிடித்து தெரிவு செய்யப்படுகின்ற ஒப்பந்தக்காரர்கள் மூலம் 60.8 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் நிர்மாணிப்பது தொடர்பில் பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. பாரிய கொழும்பு மின்இணைப்பு மற்றும் விநியோக வீண்விரயத்தை குறைக்கும் கருத்திட்டம் (விடய இல. 47)
பாரிய கொழும்பு மின்இணைப்பு மற்றும் விநியோக வீண்விரயத்தை குறைக்கும் கருத்திட்டத்தின் பொதி – 03இன் கீழ் மின்சாரத்தை விநியோகிக்கும் செயல்பாட்டுக்கு தேவையான விசேட வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. சுன்னாகம் பிரதேச காற்று சக்தி மின்னுற்பத்தி நிலையங்கள் 02 இனை நிர்மாணித்தல் (விடய இல. 48)
சுன்னாகம் பிரதேசத்தில் 10 மெகாவொட் கொண்ட இரு காற்று சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான டென்டரினை அமைச்சரவை நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் கௌரவ ரன்ஜித் சியபலாப்பிட்டிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. வத்தளை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (விடய இல. 50)
வத்தளை நீதிமன்றத் கட்டிடத் தொகுதியின் முதல் கட்ட நிர்மாணப்பணிகளை 156.18 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இம்முதல் கட்ட நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மிகவும் அத்தியவசிய தேவைகளை உள்ளடக்கிய அதன் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை 148.29 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் திட்டமிட்டு நிறைவேற்றுவதற்கு இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு நீதி அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலுவலகப் கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாராளுமன்ற கூட்டக் கொடுப்பனவை அதிகரித்தல் (விடய இல. 54)
அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அவர்களது அலுவலகமொன்றைப் பேணுவதற்கான செலவினத்தை தீர்வை செய்து கொள்ளும் பொருட்டு மாதத்துக்கு 100,000 ரூபாவினை 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கும், பாராளுமன்றக் கூட்டக் கொடுப்பனவினை ரூ.500இல் இருந்து 2,500 ரூபா வரை அதிகரிப்பதற்குமான யோசனை ஒன்றை பாராளுமன்றில் முன்வைப்பதற்காக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ கயந்த கருணாதிலக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. மாரவில கரையோர மணல் போசிப்புக் கருத்திட்டம் (இரண்டாம் கட்டம்) (விடய இல. 57)
400,000 கன மீற்றர் மணலை மாரவில தல்வில கடற்கரையின் மேலதிகப் பிரதேசத்தினுள் மணலைப் போசிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
26. சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கட்டிடமொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 58)
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் வழங்குவதற்கு நீதி அமைச்;சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ச அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
27.பறிமாற்றத்தை பதிவு செய்யாது பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தினை 2016-12-31 வரை நீடித்தல் (விடய இல. 59)
பறிமாற்றத்தை பதிவு செய்யாது பயன்படுத்தும் மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட சலுகை காலத்தினை 2016-12-31 வரை நீடிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.