01. திருகோணமலை கடற்படை கப்பல் தளத்தில் இறங்கு துறையொன்றை நிர்மாணித்தல் (விடய இல. 13)
உலகத்தில் ஆழமான இயற்கை துறைமுகமும், ஆசியாவில் இரண்டாவது மிகப் பெரிய துறைமுகமான திருகோணமலை துறைமுகமானது கடந்த காலங்களில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடுகளினால் முறையாக அபிவிருத்தி செய்ய முடியாது போனது.
இலங்கை கடற்படையினரின் மிகப்பெரிய முகாம் இங்கு அமையப்பெற்றுள்ளதோடு, மிகவும் பாரிய கப்பல் தடாகம் இலங்கை கடற் படையின் கிழக்கு படையணியின் மற்றும் கப்பல் மற்றும் சமுத்திர பீடத்தின் இருப்பிடமும் ஆகும். மிகவும் பெரிய கப்பல்களை நங்கூரம் இடுவதற்கு உகந்த முறையில் இறங்கு துறையொன்று இக்கப்பல் தடாகத்தில் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போதும், பின்னர் பல்வேறு காரணங்களினால் அந்நிர்மாண பணிகள் இடை நடுவில் நிறுத்தப்பட்டது. இலங்கை கடற்பரப்பின் பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கில் மிகவும் பாரிய கப்பல் 04 இனை 2017-2019 வரையான காலப்பகுதியில் பயன்படுத்த இலங்கை கடற்படையினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அவ்வாறான பாரிய கப்பல்களை நங்கூரம் இடுவதற்கு ஏதுவான முறையில் 220 மீட்டர் நீளமுள்ள மற்றும் 20 மீட்டர் அகலமுள்ள திருகோணமலை கடற்படை கப்பல் தடாகத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள இறங்குதுறையினை பாதுகாப்பான பாலம் ஒன்றுடன் நிர்மாண பணிகளை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. அரச மற்றும் அறை அரச நிர்வனங்களின் கட்டிடங்களை பரந்த அளவில் சூழலுக்கு இயைபான கட்டிடங்களாக நிர்மாணித்தல் மற்றும் பராமரித்தல் (விடய இல. 14)
நிலையான அபிவிருத்தி நோக்கி பயணிக்கும் போது சூழலுடன் இயைபான கட்டிடங்களை அமைப்பதற்கான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். அதனடிப்படையில் அரச நிர்வனங்களின் அனைத்து கட்டிடங்களையும் நிலையான மற்றும் சூழலுடன் இயைபான கட்டிடங்களாக பேணவும், அக்கட்டிடங்களை பயன்படுத்துவதற்கு இயலுமான முறையில் மற்றும் ஆரோக்கியமான நிலையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் சிபார்சுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் குழுவின் மூலம் குறித்த அமைச்சுக்களின் இணக்கத்துடன் தயாரிக்கப்பட்ட 'சூழலுக்கு பாதிப்பு இல்லாத கட்டிடங்களுக்கான வழிகாட்டல்கள்' இனை செயற்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் (விடய இல. 16)
நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும். எனினும் மொத்தமாக நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் 22,500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. விசேடமாக கிராமிய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக போதுமான ஆசிரியர்கள் மற்றும் வளங்கள் இல்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரச பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களை ஆசிரியர் தொழிலுக்கு சேர்த்துக் கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமை கொண்ட உயர் தரம் சித்தி பெற்ற இளைஞர் - யுவதிகளை உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞான மற்றும் கலை பட்டமொன்றை பூர்த்தி செய்தவுடன் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கும், அதற்காக அரச வங்கி ஒன்றிலிருந்து 275,000 ரூபா கடன் தொகையொன்றை அவ்விளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கும், பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு தகைமை பெற்ற இளைஞர் யுவதிகள் பட்டப்பிடிப்பினை நிறைவு பெற்ற பின் 10 வருட காலத்துக்காக தம்மால் தெரிவு செய்யப்படும் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் குறைப்பாடுகளை கொண்ட பாடசாலைகளுக்கு ஆசிரியராக பணிபுரிவதற்கு முடியுமான வகையில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த பிரதேசத்தில் ஆசிரியராக 10 வருடங்கள் பணிபுரிந்தால் பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் தொகை மீண்டும் அறவிடப்பட மாட்டாது. அதனடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக முதற் கட்டமாக இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் 5000 பேரை விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரச பாடசாலைகளில் தற்போது காணப்படும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி பட்டதாரிகளை விரைவில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
04. இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் இளைஞர் அபிவிருத்திக்கு உரித்தான கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 17)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் இளைஞர் அபிவிருத்திக்கு உரித்தான கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்தங்களுடன் இலங்கையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு மற்றும் பாகிஸ்தானின் மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்; வழங்கப்பட்டுள்ளது.
05. பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் காணப்படும் வீதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் (விடய இல. 20)
இலங்கையினுள் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் சுமார் 676 காணப்படுவதுடன், ஒரு படலைக்கு 03 புகையிரதக் காவலாளிகள் என்றவாறு மொத்தக் படலைகளுக்கும் 2,028 காவலாளிகள் இருத்தல் வேண்டும். எனினும் தற்போது கடமையில் 1,953 காவலாளிகளே கடமையில் ஈடுபடுகின்றனர். பொலிஸ் திணைக்களத்தினால் நாளொன்றுக்கு ஒருவருக்கு கொடுப்பனவாக ரூ.250 என்றவாறு மாதமொன்றுக்கு ஒருவருக்கு ரூ.7,500 படலை ஒன்றுக்கு மாதமொன்றுக்கு வழங்கப்படுகின்றது. எனினும் அத்தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை தீர்த்து கொள்வதற்காக சிபார்சுகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் தற்போது மூவருக்கு ரூ.7,500 என்றவாறு வழங்கப்படும் கொடுப்பனவொன்றாக படலை ஒன்றுக்கு ரூ.22,500 கொடுப்பனவினை வழங்குவதற்கும், அத்தடுப்புப் படலையில் சேவையினை வழங்கி வரும் சிவில் பாதுகாப்பு அங்கத்தவர்களுக்கிடையே கொடுப்பனவினைப் பகிர்ந்தளிப்பதற்கு பொருத்தமான உள்ளக வேலைத் திட்டமொன்றை தயாரிப்பதற்கும், நீண்ட கால தீர்வாக அதிகமான விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் வங்குகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவ்விடங்களில் ஒலிக்கும் 'டீநடட ரூ டுiபாவ' பொருத்துவதை துரிதப்படுத்துவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06. கேகாலை மாவட்டத்திலுள்ள மீள்குடியிருப்பு பகுதிகளிற்கான நீர் வழங்கல் வசதிகளை வழங்குதல் (விடய இல. 25)
கேகாலை மாவட்டத்திலுள்ள மீள்குடியிருப்பு பகுதிகளிற்கான நீர் வழங்கல் வசதிகளை 455 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் மேற்கொள்வதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. களுத்துறை பனாப்பிட்டியவில் அமைந்துள்ள நன்னீர் மீன்சிணைகொள் நிலையத்தின் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்துக்கு நிரந்தரமாக உரிமை மாற்றல் (விடய இல. 36)
தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனம் அலங்கார மீன்களுக்கான ஆய்வு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டு வருவதுடன், நாரா நிறுவனம் இந்த நிலையத்தின் கட்டிடத்தின் அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதால் பனாபிட்டிய மீன் சினைகொள் நிலையத்தை நிரந்தர அடிப்படையில் தேசிய நீரியல் வள ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனத்துக்கு உரிமை மாற்றுவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. திரிபோஷா உற்பத்தி நிமித்தம் சோயா போஞ்சியைக் கொள்வனவு செய்தல் (விடய இல. 38)
இலங்கையில் வருடாந்தம் அண்ணளவாக 220,000 மெற்றிக் தொன் சோயா போஞ்சி தேவைப்படுகின்றது. இந்த அளவான சோயா திரிபோஷா உற்பத்தி மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. நாட்டின் சராசரி சோயா போஞ்சி உற்பத்தி ஏறக்குறைய 22,500 மெற்றிக் டொன் அளவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடாந்த தேவைக்கும் மற்றும் நாட்டின் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி சோயா போஞ்சியை இறக்குமதி செய்வதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளப்படுகின்றது. உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதும் மற்றும் மேலதிக உணவுப் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அதனடிப்படையில் 5000 மெற்றிக் தொன் அளவான சோயா போஞ்சியை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்து தேசிய திரிபோஷh உற்பத்தி வேலைத்திட்டத்துக்கு வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நிறுவகத்தை நிறுவுதல் (விடய இல. 40)
இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நிறுவகத்தின் செயன்முறையை பலப்படுத்தும் நோக்கில் குறித்த நிர்வனத்தை பாராளுமன்ற சட்ட மூலம் ஒன்றின் மூலம் தாபிப்பதற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. வவுனியா விசேட பொருளாதார நிலையத்திற்கான காணியினைப் பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 43)
வவுனியா நகரில் விசேட பொருளாதார நிலையத்தினைத் தாபிப்பதற்காக 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூன்றுமுரிப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்திருக்கம் மதவுவைத்தகுளம் கிராமத்தில் அமைந்துள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பை குறித்த நிலையத்தை நிறுவுவதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு ஒதுக்கி கொள்வது தொடர்பில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பீ. ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளிச் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கான மிகவும் விளைதிறன் மிக்க முறைமை ஒன்றைப் பிரேரித்தல் (விடய இல. 49)
முன்பிள்ளைப் பருவ சிறுவர்களின் போசாக்குக் குறைப்பாட்டைக் குறைப்பதற்காக 'முறையான பகுப்பாய்வு மற்றும் உரியவாறு தேவையான இடங்களை இனங்கண்ட பின்னர் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களின் சிறுவர்களுக்கு ஒரு குவளை பசும் பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு பதிலாக உத்தேச காலை உணவைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை 2017ம் ஆண்டு முதல் அமுல்படுத்துவது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. கட்டக்காலி நாய்களினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை தவிர்த்தல் (விடய இல. 50)
கட்டக்காலி நாய்களிடமிருந்து பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்கு பொருத்தமான முறைமையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளை செயற்படுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கையில் நடைபெறவுள்ள 'ஊழல்களுக்கு எதிராக தேசிய மாநாடு' (விடய இல. 53)
ஊழல்களுக்கு எதிரான தேசிய மாநாட்டினை ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்துடன் இணைந்ததாக டிசம்பர் மாதம் 09ம் திகதி 700 உள்நாட்டு, வெளிநாட்டு அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கொழும்பில் நடத்துவது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்னாயக அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. டிஜிடல் தொழில்நுட்பத்தின் இலாபங்களை நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் வழங்கும் நோக்கில் வேலைத்திட்டங்களை செயற்படுத்தல் (விடய இல. 54)
2016ம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்னை கொண்டு, 'டிஜிட்டலாக்க நிகழ்ச்சித்திட்டம்' மற்றும் நெசனல தரமுயர்த்தல்' ஆகிய நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் 40 வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய வெலி ஓயா, கஜபாபுர பிரதேசத்திலிருந்து நெடுங்கேணி நகரம் வரை செல்லும் பிரதான வீதியை புனர்நிர்மாணம் செய்தல் (விடய இல. 57)
முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய வெலி ஓயா, கஜபாபுர பிரதேசத்திலிருந்து நெடுங்கேணி நகரம் வரை செல்லும் பிரதான வீதியை 466.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் புனர்நிர்மாணம் செய்வதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. கண்டி போதனா வைத்தியசாலையில் முன் மொழியப்பட்ட புற்று நோய்ச் சிகிச்சை மையத்தின் மீதி கட்டுமான வேலைகளை பூரணப்படுத்துதல் (விடய இல. 61)
கண்டிப் போதனா வைத்தியசாலையில் உள்ள முன்மொழியப்பட்ட புற்று நோய் சிகிச்சை மையத்தின் எஞ்சியிருக்கும் கட்டுமான வேலையை (கட்டம் - 111) அமைச்சரவையின் நிலையான தொழில்நுட்ப மீளாய்வுக் குழுவின் சிபார்சின் பெயரில் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்திற்கு வழங்குவதற்கு சுகாதார போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. இலங்கை தேசிய வைத்தியசாலையின் கால் - கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல் (விடய இல. 62)
இலங்கை தேசிய வைத்தியசாலையின் கால் - கை வலிப்பு நோயாளர் பிரிவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் தீர்மானத்தின் படி வழங்குவதற்கு சுகாதார போஷhக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பெரலிய நங்கூரமிடும் தளத்தின் வசதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 63)
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரலிய நங்கூரமிடும் தளத்தின் வசதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்ளல் குழுவின் தீர்மானத்தின் படி வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. தொழில் திணைக்களத்தை மறுசீரமைத்தல் மற்றும் தொழில் அலுவலர்களின் டீசவைப் பிரமாணப் குறிப்பைத் தயார் செய்தல் (விடய இல. 72)
தொழில் திணைக்களத்தில் தற்போது காணப்படும் குறைப்பாடுகளை இனங்கண்டு அவற்றினை தீர்ப்பதன் மூலம் எதிர்காலத்துக்கு மிகவும் பொருத்தமான திணைக்களமொன்றாக மாற்றுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன் வினைத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் அதற்கு தேவையான சிபார்சுகளை பெற்றுக் கொள்வதற்காக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரினால் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவின் பணிகள் தற்போது இறுதித் தருவாயில் உள்ளது. அதற்கு பகரமாக தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளின் சேவை தரத்தினை விருத்தி செய்வது தொடர்பில் தொழில் அலுவலர் சேவைக்கு சேவைப் பிரமாணக் குறிப்பொன்றைத் தயார் செய்வதற்கு அமைச்சு மற்றும் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளை கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இரு குழுக்களினதும் அறிக்கைகளை மிக விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் கௌரவ டிபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டத்திக் மீளாய்வு (விடய இல. 73)
அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்திட்டத்தினை எதிர்காலத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், 2016 சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அரசாங்க கேள்வி மனுச் செயன்முறையின் ஊடாக 2015 இல் கொள்வனவு செய்யப்பட்ட எஞ்சிய நெல்லிருப்பினை அகற்றுவதற்கும், நெல் சந்தைப்படுத்தும் சபையின் இழப்புக்களைக் குறைக்கும் நோக்குடன் ஒக்டோபர் - நவம்பர் காலப்பகுதியில் சந்தையில் உயர்வான நெல் விலைகள் பதியப்படும் போது 2016 இல் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லிருப்பினையும் மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையிலுள்ள உள்ள நெல்லிருப்பினை அகற்றுவதற்கும், நெல் அகற்றுவதன் மூலம் கிடைக்கப் பெறும் வருமானத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் திறைசேரிக்குச் செலுத்த வேண்டியுள்ள நிலுவையை மீட்டலும், மற்றும் அரசாங்க வங்கிகளுக்கு மீளச் செலுத்துவதற்கும் நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை, பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. சிகரட் மற்றும் புகையிலை உற்பத்திகள் மீதான வரித் திருத்தங்கள் (விடய இல. 74)
சிகரட் மற்றும் புகையிலை உற்பத்தி மீது விதிக்கப்பட்டிருக்கும் வரித் திருத்தங்கள் தொடர்பில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சுகாதார, போசனை மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழு நியமித்த அமைச்சு மட்டக் குழு முன்வைத்த பிரேரணைகளின் படி, சிகரெட்டுக்கள் மீது 15 சதவீத பெறுமதி சேர் வரியினை விதிப்பதற்கும், ஒரு சிகரட் உற்பத்தி வரியினை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கும், பீடி இலைகளின் இறக்குமதி மீதான செஸ் வரியை கிலோ கிராம் ஒன்றுக்கு 2000 ரூபாவிலிருந்து 3000 ரூபா வரை அதிகரிப்பதற்கும், இதற்கு மேலதிகமாக வேறு முறைகளை பிரயோகித்து நாட்டில் புகையிலைப் பாவனையைக் குறைப்பதற்கும் அமைச்சரவையின் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
22. போகம்பர சிறைச்சாலையின் பூமியினை மீள் அபிவிருத்தி செய்தல் (விடய இல. 76)
கண்டி போகம்பர சிறைச்சாலையினை பல்லேகலை பிரதேசத்துக்கு மாற்றியதன் பின்னர் இடைவெளியாகி உள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பினை வரலாற்று முக்கியத்துவமிக்க பிரதேசமாகவும், அதன் வரலாற்று அம்சங்களை பாதுகாப்பதற்கும், அதனை சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவமிக்க இடமாக மாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு உகந்த உயர் தரத்திலான சர்வதேச நிர்வனம் ஒன்றுக்கு வழங்குவது தொடர்பில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.