• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

2019.03.19

2019.03.19 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் 

 

01. 'போதைப்பொருளிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடு' என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 05ஆவது விடயம்)

போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்கும் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்காக போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு அளிப்பதற்கான தேசிய அதிகார சபையை அமைத்தல் மற்றும் நச்சுத்தன்மைக் கொண்ட போதைப்பொருளை அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்துவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் அதிகார சபையொன்று அமைக்கும் வரையில் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனைக்குழுவொன்றை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

02. ஊனமுற்ற நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிக்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 06ஆவது விடயம்)

தற்பொழுது இலங்கையில் ஊனமுற்ற நிலையுடனான நபர்கள் மற்றும் முதியோர் சமூகம் மொத்த மக்கள் தொகையின் 15சதவீததத்திற்கு மேலான தொகையைக்கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சிரமங்ளை குறைத்து இவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் இவர்கள் மற்றவர்களில் தங்கியிருக்காது கௌரவமாக வாழ்வதற்கும் இவர்களை நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்படவேண்டியுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி ஊனமுற்ற நிலையில் உள்ள நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிப்பது தொடர்பிலான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கமைவாக பொது சேவைகள் மற்றும் வசதிகளை பயன்படுத்தும் போது சமநிலையை உறுதிபடுத்தல் மற்றும் அவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் இவர்களை ஊக்குவித்தல் இவர்கள் அனைத்து சமூகத்திலும் வேறுபட்ட ரீதியில் கருதாது செயல்படுவது தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்துதல் மற்றும் நடத்தை மேம்பாடு மற்றும் ஆய்வு கணிப்பீடு மற்றும் கொள்கை வகுத்தல்,ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஊனமுற்ற நிலையில் உள்ள நபர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை ஊக்குவிப்பது தொடர்பிலான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தின் மூலம் ஏனைய அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கை ஊடாக கூட்டு நடவடிக்கையின் மூலம் மேற்கொள்வதற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

03. சில்ப சேனா கண்காட்சி - இலங்கை தொழில்நுட்ப புரட்சி (கைவினை கண்காட்சி - இலங்கையர் தொழில்நுட்ப புரட்சி) (நிகழ்ச்சி நிரலில் 07ஆவது விடயம்)

நாட்டின் பல்வேறு அரச நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தயாரிப்பைப் போன்று மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான வசதிகளை முன்னெடுத்து அவற்றின் ஆய்வு வணிகமயத்திற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முக்கிய நோக்கத்துடனான சில்பசேனா -- இலங்கையர் தொழில்நுட்பப் புரட்சி என்ற கைவினை கண்காட்சி - இலங்கையர் தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் மாவட்ட மட்டத்தில் கண்காட்சி நடத்துவதற்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது அரச ஆய்வு நிறுவனங்களினால் மேம்படுத்தப்பட்டுள்ள குறைந்த செலவிலான தொழில்நுட்பம் மற்றும் உயர்நிலை தொழில் நுட்பத்தின் மூலமான தேசிய கைத்தொழில் துறையினருக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அறிமுகப்படுத்த இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. உத்தேச கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக ஏற்றமதி அபிவிருத்தி சபை தொழிற்சாலை அபிவிருத்தி சபை அரச ஆய்வு நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகங்கள் அடங்கலாக அரசாங்க நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக வௌ;வேறான அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட கண்காட்சி மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக சில்பசேனா கண்காட்சியை நடத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

04. பாடல் அல்லது இசை தயாரிப்பின் உரிமையாளர்களுக்கு ஆசிரியர் உரிமைக்கான கொடுப்பனவுக்கான கட்டளை (நிகழ்ச்சி நிரலில் 08 ஆவது விடயம்)

2018ஆம் ஆண்டு இலக்கம் 7இன் கீழான புலமைச்சொத்து (திருத்தம்) சட்டத்தின் மூலமான திருத்தம் 2003ஆம் ஆண்டு இலக்கம் 36இன் கீழான புலமைச்சொத்து சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பாடல் அல்லது இசை தயாரிப்பு உரிமையாளர்களின் வெளியீட்டுக்கான உரிமை மற்றும் அது தொடர்பான உரிமைக்காக அவற்றின் உரிமையாளர்களுக்கு அல்லது அவர்களின் சார்பில் அங்கத்துவம் வைக்கும் இணக்கப்பாடு சங்கத்திற்காக செலுத்த வேண்டிய ஆசிரியர் தன்மைக்கான உரிய வகையில் கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும் இருப்பினும் இன்னும்; தமது இசை அல்லது பாடலுக்கு படைப்பு வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவோரினால் இந்த படைப்புக்களின் உரிமையாளர்களுக்கு உரிய வகையில் ஆசிரியர் தன்மைக்கான கொடுப்பனவு செலுத்தப்படவில்லை என்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தன்மைக்கானஆகக் குறைந்த கட்டணம் உள்ளடக்கிய 2011.01.05 திகதியன்று 1687ஃ28 கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டு இலக்கம் 1 இன் கீழான புலமைச்சொத்து உத்தரவை இரத்து செய்து ஆசிரியர் தன்மையை பெற்றுக்கொள்வதற்கு பொறிமுறை ஒன்றை வகுப்பதற்காக 2003ஆம் ஆண்டு இலக்கம் 36இன் கீழான புலமைச்சொத்து சட்டத்தின் கீழ் கட்டளையை விநியோகித்தல் மேலும் பயனுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக சட்டமூல தயாரிப்பு பிரிவினால் இது தொடர்பில் திருத்த சட்டமூலம் வகுப்பதற்கான கட்டளைக்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து அங்கீகரிப்பதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

05. இயந்திர இலத்திரனியல் விஞ்ஞான துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாhரத்தை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 11ஆவது விடயம்)

இயந்திர இலத்திரனிய விஞ்ஞானத்தில் ஊக்குவிக்கப்படும் பொருளாதார அபிவிருத்தி மூலோபாய வேலைத்திட்டத்தின் ஒரு உபகரண கூறாக நடைமுறைப்படுத்துவதற்காக உத்தேச நீண்டகால கடன் வசதி என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா (Enter prise Sri lanka) என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு இதற்கு முன்னரான பரிந்துரைக்கு வழங்குவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உத்தேச திட்டத்தின் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு இதன் மற்றுமொரு கூறாக அடையாளம் காணப்பட்டுள்ள தமான பயிற்சி முன்மாதிர மற்றும் ஆய்வு வசதி அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியை ஒதுக்கீடு செய்வதன் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளடக்கிய உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

06. பின்தங்கிய பிரதேச மக்களின் போக்குவரத்து வசதிக்காக பாதுகாப்பான சிறிய பாலங்களை அறிமுகப்படுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 12ஆவது விடயம்)

பின்தங்கிய பிரதேசங்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பற்ற நிலைமையில் காணப்படும் கொடிகளை கொண்ட பாலம் அல்லது துணையற்ற மேற்கொள்ளப்படும் போக்குவரத்து வசதி உள்ள இடங்கள் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அடையாளங் கண்டு அந்த இடங்களுக்காக இலங்கை பொறியியலாளர் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப (NERD) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 1000 பாதுகாப்பு பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டிற்கு உட்பட்ட இடைக்கால வரவு செலவு கட்டமைப்புக்குள் இதற்கான நிதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்து அற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆய்வுதுறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

07. கொத்துக்குண்டு தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டை அதாவது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இலங்கையில் சட்டமாக்குதல் (நிகழ்ச்சி நிரலில் 20ஆவது விடயம்)

பல்வேறான வெடிப்பைக் கொண்ட 90 – போர் ஆயுதம் அடங்கிய மிகவும் மோசமான அழிவைக் கொண்ட ஆயுத வகையைச் சேர்ந்த கொத்துக் குண்டை தவிர்ப்பது தொடர்பான உறுதிப்பாட்டை பின்பற்றுவதன் மூலம் இலங்கை மனிதநேய ஆயுத ஒழிப்புக்காக ஆயுத ஒழிப்புக்காக முன்னிற்கும் நாடு சாதகமான செயற்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆற்றல் கிட்டும் .இதன்மூலம் பிராந்திய சமாதானம் பாதுகாப்பைப் போன்று சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பை கவனத்திற் கொண்டு கொத்து குண்டு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு அல்லது ஒஸ்லோ இணக்கப்பாட்டை இந்த நாட்டின் சட்டக் கட்டமைப்புக்குள் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இதற்கமைவாக தேவையான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

08. இலங்கை சமாதான படை நடவடிக்கைப் பயிற்சி பாடசாலையில் வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமாதான படையணி நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் இராணுவ வீரர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்குதல் குகுலே கங்க நீர் மின்சாரத் திட்டத்தின் அலுவலக கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பயிற்சி மத்திய நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த பயிற்சி நடவடிக்கைகளை மேலும் தரமானதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் தரத்திற்கு அமைய மேற்கொள்ளக்கூடிய வகையில் 811.71 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் இந்தப் பயிற்சி பாடசாலை வசதிகளை விரிவுபடுத்துவற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

09. 7500 திட்ட பயிற்சி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 28ஆவது விடயம்)

அபிவிருத்தித் திட்டங்களை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக அந்த அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தவதற்கும் இணைப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய பணிகளாக உள்ளன. இதற்காக க.பொ.த (உ ஃத) பரீட்சை வரையில் கல்வி கற்று தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் அவர்களை தேசிய அபிவிருத்தி நடவடிக்கைகளின் பங்குதாரர்களாக முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சுக்கு 7500 பயிற்சித்திட்ட உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று தெரிவு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு பயிற்சி திட்ட உதவியாளர் பதவியில் நியமிப்பதற்கும் அவர்களுக்கு ரூபா 15000 ஐ மாதாந்தம் செலுத்துவதற்கும் கௌரவ பிரதமர் மற்றும் தேசிய கொள்கை பொரளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

10. வனஜீவராசிகள் மற்றும் தாவரவள பாதுகாப்புக்கான கட்டளைச் சட்டத்திற்கு அமைய வனஜீவராசிகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவிற்கான அங்கத்தவர்களை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 32ஆவது விடயம்)

சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ அமைச்சின் கீழ் உள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு காடுகளில் அல்லது இந்த பாதுகாப்புக்கு அப்பால் வாழும் வனஜீவராசிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் தேசிய வனஜீவராசிகள் பாதுகாப்பு சுற்றாடல் கொள்கை மற்றும் நடைமுறைப்படுத்தல் வனஜீவராசிகள் வளத்தை பாதுகாத்தல் மற்றும் யானையினால் மனிதர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை கட்டுபடுத்துதல் போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சின் கீழ் உள்ள பூங்காக்கள் தாவரவியல் திணைக்களத்தினால் பேராதெனிய அரசுக்குரிய பூங்கா உள்ளிட்ட தாவரவியல் பல பூங்காக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக இந்த அமைச்சின் கீழ் உள்ள மிருகக்காட்சிசாலை திணைக்களத்தினால் தெஹிவளை மிருகக்காட்சிசாலை பின்னவலை யானைகள் சரணாலயம், பின்னவல புதிய வனஜீவராசிகள் பூங்கா மற்றும் அம்பாந்தோட்டை சபாரி பூங்கா நிருவகிக்கப்படுகின்றன.  இந்தப் பணிகளுக்காக அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வனஜீவராசிகள் மற்றும் தாவரவள பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 70(1) சரத்தின் கீழ் துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய ஆலோசனைக்குழுவொன்றை நியமிப்பதற்கு சுற்றறுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

11. ஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை நடத்துதல் ( நிகழ்ச்சி நிரலில் 33ஆவது விடயம்)

ஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை 2019ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி அன்று வெசாக் புன்போஹோ தின அதாவது வெசாக் நோன்மதி வேலைத்திட்டம் மே மாதம் 18ஆம் திகதி அன்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் காலி ஹிக்கடுவையில் அமைந்துள்ள தெல்வத்த தொட்டகமுவ புராண ரண்பத் ரஜமஹா விகாரையை கேந்திரமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வைபவத்திற்கு அமைவாக காலி மாவட்டத்தில் விகாரைகளின் பௌதீக அபிவிருத்திக்காக வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தவதற்கும் போதைப்பொருள் அற்ற ஆன்மிக அபிவிருத்திக்கான சமூகத்தை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2019ஆம் ஆண்டில் அரசாங்க வெசாக் நோன்மதி வைபவத்தை காலி மாவட்டத்தில் ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்வத்த தொட்டகாகமுவ புராண ரத்பன் ரஜமஹாவிகாரையை கேந்திரமாகக் கொண்டு நடத்துதல். 2019 மே மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21 வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துதல் மற்றும் அதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

12. 1949ஆம் ஆண்டு இலக்கம் 58இன் கீழான நிதி சட்டத்திற்கான திருத்தம் (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)

இலங்கையின் மத்திய வங்கிக்கான சட்ட மேம்பாட்டு சர்வதேச பரிமாற்றத்திற்கான வகையில் முன்னெடுப்பதற்கான மறுசீரமைப்பு திருத்தத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மத்திய வங்கி பணிகளுக்காக தற்பொழுது அதிகாரம் வழங்கும் 1949ஆம் ஆண்டு இலக்கம் 58 கீழான நிதி சட்டத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் நிதி சபை மற்றும் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. புதிய பணவீக்கத்தை இலக்காக கொண்டு நிதிக்கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்தல். இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ கட்டமைப்புக்கள் நல்லாட்சி தரத்தை மேம்படுத்தல், தகவல்களை வெளியிடுதல், தேவைகள் பலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் இலங்கை மத்திய வங்கி நாட்டின் வெற்றிகரமான அதிகார சபை என்ற ரீதியில் அறிந்துகொள்வதற்கான திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக 1949ஆம் ஆண்டு இல 58 கீழான நிதி சட்டத் தைகொண்டு புதிய சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

13. நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்திரியில் 5 மாடி கட்டடிடத் தொகுதியில் மேலும் மேற்கொள்ளக்கூடிய நவீனமய நடவடிக்கைகள் (நிகழ்ச்சி நிரலில் 40ஆவது விடயம்)

நீர்கொழும்பு மாவட்ட பெரிய ஆஸ்பத்தரி 5 மாடி கட்டடத் தொகுதியை புனரமைப்பதற்கான ஒப்பந்தம் 500 மில்லியன் ரூபா மதிப்பீட்டின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண சட்டக் கூட்டுத்தாபனத்திடம் வழங்குவதற்காக அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நவீனமய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கட்டட தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் அத்தியாவசிய பணிகள் சில ஆஸ்பத்திரி அதிகார சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சத்திர சிகிச்சையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் கழிவுநீர் கட்டமைப்பை அமைத்தல் உள்ளிட்டவை அடையாளங்கண்டு அத்தியாவசியப் பணிகளுக்களாக மேற்கொள்ளக் கூடிய வகையில் 500 மில்லியன் ரூபாவிற்கு இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 692.43 மில்லியன் ரூபாவுக்கும் திட்டத்தில் மொத்த மதிப்பீடு 692.43 பில்லியன் ரூபா வரையிலான திருத்தத்தை மேற்கொள்வதற்கான சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர ராஜித சேனாரட்ன முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

14. மாதுறு ஓய நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோல்ட் மிதக்கும் சூரிய மின்உற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல். (நிகழ்ச்சி நிரலில் 45ஆவது விடயம்)

மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோல்ட் மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்றை இலங்கை மகாவலி அதிகார சபை இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பேண்தகு சக்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களின் கூட்டுத்திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்து. இந்த திட்டம் சூரிய பெனல் மற்றும் மின்சாரத்தை களஞ்சியப்படுத்தக்கூடிய இலத்திரனியல் செல்லை (Cell) பயன்படுத்தி சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தும் திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக திட்டத்திற்கு கனேடியன் சோலர் நிறுவனத்துடன் கூட்டு பங்குதாரர் திட்டமாக அமைப்பதற்கும் இது தொடர்பான பேச்சுவார்த்தை விடயங்களை மேற்கொள்வதற்காக கூட்டு செயற்பாடு குழுவொன்றை நியமிக்கவும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன மற்றும் மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களும் சமரப்;பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

 

15. தொற்றா நோயான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்;டுள்ள மாவட்டங்களில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகித்தல். (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)

தோற்றா நோயினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பொது மக்களுக்கு சுத்தமான குடி நீரை வழங்கும் வேழலத் திட்டத்தின் கீழ் 298 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி லுனுகம்வேஹேர கிரிந்தி ஓயா நீர் சுத்திகரிப்பு இயந்தித்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைச்சரவையினர் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் உத்தேச மேம்படுத்தப்படும் கிரிந்தி ஓய சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் திஸ்ஸமாராம பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீமத் நரேந்திர மோடி மாதிரிக் கிராமமான 217 வீடுகளைக் கொண்ட பிரிவுக்கு நீரை விநியோகிப்பதற்குத் தேவையான குழாய் ஊடான நீர் விநியோக திட்டம் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு நகரத் திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களும் சமர்ப்பித்த கூட்டு ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

16. சிறுவர் ஆரம்ப பருவ கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை 2018 (நிகழ்ச்சி நிரலில் 59ஆவது விடயம்)

2004ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை தேசிய ரீதியில் போன்றே சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி இடம்பெறுதல் நிலைமையைக் கவனத்தில் கொண்டு காலத்திற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கமைவாக 2018ஆம் ஆண்டு ஆரம்ப சிறுவர் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை அமைச்சரவையிடம் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போது இதற்காக பல்வேறுபட்ட துறையைச் பிரதிநிதித்துவப்படுத்தும் வiகில் என்ற ரீதியில் சமர்ப்பிக்கப்பட்ட கண்காணிப்பை கவனத்தில் கொண்டு மேலும் மேம்படுத்தும் வகையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கு அமைவாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டு ஆரம்ப சிறுவர் பராய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை உரிய மூலோபாய முறைகளை கவனத்தில் கொண்டு அதற்கமைவாக தேசிய மகாகாண பிரதேச மற்றும் கிராமிய மட்டத்தில் மூலம் நடைமுறைப்படுத்துவதற்காக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் வரண்ட வலய அபிவிருத்தி அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீhரம் வழங்கியுள்ளது.

 

17. மாத்தறை புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதி எதிர்கால நிர்மாணப் பணிகளை கண்காணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 60 ஆவது விடயம்)

மாத்தறை புதிய கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதுடன் இதுவரையில் அதன் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. 2019ஆண்டு மே மாதம் அளவில் சம்பந்தப்பட்ட நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு நீதிமன்ற கட்டிடத் தொகுதியை உரிய வகையில் பயன்படுத்துவதற்காக மேலும் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு நிர்மாணப் பணிகள் மற்றும் வசதிகளை செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

18. நீதிமன்றங்களில் வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 61ஆவது விடயம்)

நீதிமன்றப் பணிகளை மேம்படுத்துவதற்காக அதற்காக பயன்படுத்தப்படும் கட்டிடங்களில் போதுமான இடவசதி மற்றும் வசதிகள் இல்லாததினால் நீதிமன்றங்களில் வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் கீழ் வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதியை நிர்மாணித்தல், நாரம்மல சுற்றுலா நீதிமன்ற அலுவலக கட்டடத் தொகுதியை விரிவுபடுத்தல் , வாகரை மற்றும் தெல்கொட சுற்றுலா நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிர்மாணித்தல் , அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் மாவட்ட நிதிவான் நீதிமன்றங்கள் மற்றும் குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குப் பொருட்களுக்கான அறை மற்றும் ஆவணப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் சிலாபம் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த அபிவிருத்திப் பணிகளை 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரையிலான இடைக்கால வரவு செலவு கட்டமைப்புக்குள் 592.86 மில்லியன் ரூபா முதலீட்டுடன் மேற்கொள்வதற்காக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமரப்;பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

19. கல்வி மேற்பார்வைரயளர் சேவை நிறுவனத்தை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலில் 62ஆவது விடயம்)

தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வி செயற்பாடுகளை தரமான வகையில் மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட புதிய மேற்பார்வை மற்றும் மதிப்பீடு கலாச்சாரத்தை முன்னெடுப்பதற்காக கல்வியுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு மற்றும் பொறுப்பை உறுதிசெய்வதற்காக கல்வி மேற்பார்வை சேவை என்ற பெயரில் கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அதனை மாகாணம் மற்றும் துணை நிறுவன மட்டத்தில் அமைப்பதற்கும் கல்வி மேற்பார்வை சேவையினால் மேற்கொள்ளப்படும் கண்டறிதல் பகுப்பாய்வு மேற்கொண்டு பொருத்தமான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக சுயாதீன கல்வி பெறுபேறு சபை ஒன்றை அமைப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

20.ஆசிய ,ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 3வது கூட்டத்தை இலங்கையில் நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகரிக்கும் முதியோரின் எண்ணிக்கைக்காக சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சவால் என்ற தொனிப்பொருளில் ஆசிய , ஐரோப்பிய அரசியல் அமைப்பின் 3ஆவது கூட்டம் 2019 ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரையில் கொழும்பில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை நடத்துவதற்கு தேவையான அனுசரனை மற்றும் வசதிகளை செய்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களும் ஆரம்ப கைத்தொழில் சம ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே அவர்களும் கூட்டாக சமரப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

21. இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குறுத்தல் கண்காணிக்கப்படும் நிறுவனங்களில் சட்டம் சார்ந்த கணக்காய்வை நடத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 73ஆவது விடயம்)

திறைச்சேரி உண்டியலை விநியோகிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தொடர்பில் பரிசோதனை செய்து அறிக்கை இடுவதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை மத்திய வங்கிக்கான சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த பணிக்காக சர்வதேச அனுபவத்தைக் கொண்ட நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது,

 

22. அநுராதபுரதம் தெற்கு ஒன்றிணைக்கப்பட்ட நீர் விநியோக திட்டத்தின் 2வது கட்டப் பணிகளை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)

அநுராதபுரம் தெற்கு ஒன்றிணைக்கப்பட்ட நிர் விநியோகத் திட்டம் 2ஆம் கட்டப் பணிகளில் நாச்சதுவ ,தலாவ , ரெபேவ, மிஹிந்தலை, திறப்பனை குடாநகரய அநுராதபுர நகரத்தின் சில பிரதேசங்களில் நுவரகம பிரதேச மத்திய மற்றும் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் பொதுமக்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறிருந்த போதிலும் இதற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ள குளங்களின் நீரை விநியோகிப்பதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக திட்டத்திற்குத் தேவையான நீரை நாச்சிதுவ குளத்திலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு தேவையான துருவில 33500 கண மீற்றரைக் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்புக்கான 9 கோபுரக் களஞ்சியக் கட்டிடங்கள், நீரை சேகரித்து வைப்பதற்கு 6 நீர்த்தாங்கிகளும், விநியோக கட்டமைப்பு மற்றும் நாச்சிதுவ குளத்திலிருந்து குருவில வரையில் கொண்டு செல்வதற்கான குழாய் வழியே அடங்கலாக 16936.06 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்கு தற்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேவையான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு பெறுகைக்குழுவொன்றை நியமிப்பதற்காக நகரத் திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

23.ஏரியல்  1500 கிலோமீற்றரை விநியோகித்தல் , வழங்குவதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)

1500 கிலோமீற்றர் ஏரியல் கட்டுமானம் வழங்குதல் மற்றும் விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய வரையறுக்கப்பட்ட கட்டுமானம் பொது நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

24. யாழ்பாணத்தில்  இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21 ) வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)

மூலோபாய வியூக வீதி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழான உப திட்டமாக வகுக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையிலான வீதியில் 1.83 கிலோமீற்றர் தொடக்கம் 14.6 கிலோமீற்றர் வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட (Sierra construction) நிறவனத்திடம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

25. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொள்வதற்கான கரும பீடத்தை செயற்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 81ஆவது விடயம்)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்ல் பயணிகள் வெளியேறும் பிரிவில் பயணிகளுக்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக்கொள்வதற்கான கரும பீடத்தை 3 வருட காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய சம்பத் வங்கி இலங்கை வங்கி வரையறுக்கப்பட்ட தோமஸ் குக் இலங்கை தனியார் நிறுவனம் கொமர்ஷல் வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கிகளிடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

26. கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் பிரிவு கட்டிடத்தில் குளிரூட்டி அறைகளின் வசதிகளை புனரமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 82ஆவது விடயம்)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும்(Terminal)  கட்டிடத்தில் குளிரூட்டல் அறை இலக்கம்  2 KK 1  இல் குளிரூட்டல உபகரணங்கள் உள்ளிட்டவை குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் வசதிகளை சீர்செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய (Ms Soft logic Retail (Pvt )Ltd. ) என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கள் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகுhரம் வழங்கியுள்ளது.

 

27. சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 89ஆவது விடயம்)

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசியான ஏபோய்ட்டின் என்ற 850000 மருந்து ஊசிகளை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய இந்தியாவின் ;  Ms Relaince Science  என்ற நிறுவனத்தில் 918000 அமெரிக்க டொலரில் கொள்னவு செய்வதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமப்ர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

28.இருதய நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து ஊசிகளை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 90ஆவது விடயம்)

இருதய நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எனோக்சபாரின் சோடியம் என்ற மருந்து ஊசிகள் 690000 கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவையினால் நியிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.82 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவின் Ms Shenzhen Techdow Pharmaceutical என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 
 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.