தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான நான்காவது இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள் நேற்று (18) நாடளாவிய ரீதியில் நடைபெற்றது.
டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போர் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு மேல் மாகாணத்தை மையப்படுத்தி மூன்று மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் வீடில்லாதவர்களுக்கு அரச வங்கிகளினூடாக விசேட வீடமைப்புக் கடன்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொது நிறுவன அபிவிருத்திபிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
பிறக்கும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
விருசர' வரப்பிரசாத அட்டை திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (14) இடம்பெற்றது.
விருசர வரப்பிரசாத அட்டை' திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மேலும் அதிகரிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இவ்வாண்டில் (2016) பல்வேறு படிமுறைகளில் மொத்தமாக 25,000 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் எதிர்வரும் ஆண்டில் (2017) மேலும் 25,000 விருசர அட்டைகளை வழங்க எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
14.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.