ஒவ்வொரு மாதமும் அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை வட மாகாணத்திற்கு வருகை தந்து தனது அமைச்சின் கீழ் நடைபெறும் அபிவிருத்தி பணிகள் குறித்து கண்டறியுமாறு சகல அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) நாளை (07) முதல் இணையத்தளத்தின் மூலம் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனநேற்று (மார்ச், 05) அங்கு விஜயம் செய்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற அடை மழையின் போது ஏற்பட்ட மண்சரிவில் வீடுகளை இழந்த மற்றும் பாதுகாப்பற்ற பிரதேசங்களில் வசிக்கும் அரணாயக்க மக்களுக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பமாகியது.
அரணாயக்க பிரதேச செயலகத்தின் கலுகல கிராம சேவையாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 80 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் அரம்பமாகின.
இவற்றில் 40 வீடுகள் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்படுகின்றன. 40 வீடுகள் கேகாலை மாவட்டத்திலுள்ள பத்து பாடசாலைகளில் உள்ள சாரணர் குழுக்களில் உள்ள 150 பேர் நிர்மாணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் சாரணர் மாணவர் குழு, அவற்றுக்கு பொறுப்பான ஆசிரியர்கள், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ஶ்ரீநாத் குணரத்ன, கேகாலை மாவட்ட சாரணர் ஆணையாளர் தீபால் குணவர்தன மற்றும் ஜப்பான் க்வாஷிங் லாகுஷிங் பல்கலைக்கழகத்தின் அதஷி ஆஷின் விரிவுரையாளர் உட்பட ஜப்பான் மாணவ மாணவிகள் 20 பேரும் கலந்துகொண்டனர்.
நாட்டின் பல மாவட்டங்களில் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு டெங்கு ஒழிப்பு வாரத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனரத்ன தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவிடம் கோரியுள்ளார்.
2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்
அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.