தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் நிலைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களை உருவாக்குவதற்காக தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சின் உதவிப்பணிப்பாளர் பந்துல கமகே தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (28) முற்பகல், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட முயற்சியாண்மை அபிவிருத்தி தொழில்பாட்டுக்குழு அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், சுயசக்தி 10 லட்சம் தொழில் வாய்ப்புக்கான தேசிய வேலைத்திட்டமானது, சிறு வர்த்தக அபிவிருத்தியினூடாக தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பை உருவாக்குதன் மூலம் பிரதேச நடுநிலை பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல், இளைஞர், யவதிகளின் முயற்சியாண்மை திறமைகளை அபிவிருத்தி செய்தல், வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கான பொருத்தமான சூழ்நிலைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப சந்தை மற்றும் நிதிவளங்களைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வேலைத்திட்டத்தில் 3 குழுக்கள் தேசிய தொழிற்பாட்டுக்குழு, மாவட்ட முயற்சியாண்மை தொழற்பாட்டுக்குழு, பிரதேச முயற்சியாண்மை தொழிற்பாட்டுக்குழு ஆகியன அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும்.
இதில் பிரதேச அடிப்படையில் அடிமட்டத்திலிருந்து பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதன் அடிப்படையில் அதற்கான தீர்வுகள் ஏற்படுத்தப்படும் வகையிலும், சிறிய நடுத்தர முயற்சியாண்மையாளர்களும் ஆலோசனைகள் மானிய அடிப்படையிலான கடன்களும் வழங்குவதற்'கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் உதவிப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், விளக்கங்களை அமைச்சின் உதவிப்பணிப்பாளர் எல்.ஏ.அருண் பிரியந்த, மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஏ.நிஹ்மத்துல்லா ஆகியோரும் வழங்கினர். அத்துடன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், வங்கிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்ட முயற்சியாண்மை தொழற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டதுடன், அது தொடர்பான செயற்பாடுகள் வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
LDA_dmu_batti