ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் 34 கூட்டத் தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று காலை (27) ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குடரஸ்ஸை சந்தித்தார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் பொதுச் செயலாளராக பதவியேற்ற அந்தோனியோ குடரஸ்ஸை வெளிவிவகார அமைச்சர் முதற்தடவையாக நேற்று சந்தித்தார்.
1978ம் ஆண்டு தொடக்கம் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட இலங்கை விஜயம் தொடர்பில் இச்ந்திப்பில் நினைவூட்டிய அவர், இலங்கை தான் நேசிக்கும் நாடுகளில் ஒன்று என்றும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இதன்போது வெளிவிவகார அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இலங்கை அரசின் மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு ஐநா பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதிளித்த பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம் செய்ய தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.