பிரதமர் ரணில் விக்கரமசங்க இன்று (01) ஹொங்கொங் செல்லவுள்ளார்.
த இக்கொனமிஸ்ட் (The Economist) சஞ்சிகை ஏற்பாடு செய்துள்ள 2017இல் உலகம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் ஹொங்கொங் பயணமாகிறார்.
இம்மாநாட்டில் நடைபெறும் மிக முக்கியமான கலந்துரையாடலில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற 2017இல் உலகம் என்ற சர்வதேச மாநாட்டில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பூட்டான் பிரதமர் ஹெரிங் டொப்கே கலந்துகொண்டிருந்தார்.
இம்மாநாட்டில் உலகிலுள்ள முதல்நிலை கல்விமான்கள், அறிஞர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரதமருடன் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, சீனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கருணாசேன கொடிதுவக்கு, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி மற்றும் பிரதமரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா ஆகியார் கலந்துகொள்கின்றனர்.