நல்லிணக்கத்திற்கான மாதிரி நிறுவகமொன்று முதல் தடவையாக நேற்றுமுன்தினம் (21) முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் பல்கலைக்கழக ஆணைக்குழவும் இணைந்து இந்த நல்லிணக்கத்திற்கான மாதிரி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க மற்றும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே..ஜெய்சங்கர் உட்பட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பதிவாளர் மற்றும் அதன் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க நல்லிணக்கத்திற்கான மாதிரி நிறுவகத்தின் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து வதை;து ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிறுவகத்தின் ஊடாக தேசிய நல்லிணக்க வேலைத்திட்டத்தினை அடிப்படையாக கொண்டு கலை கலாசார நிகழ்வுகள் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்கள் இடம் பெறவுள்ளன.
LDA_dmu_batti