• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

விளாவட்டவான் கிராம மக்களுக்கு வாழ்வாதார உதவிகள்

வவுணதீவூ பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விளாவட்டவான் கிராமத்திற்கு சுமார் 70 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கென தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ​கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
 
சமுர்த்தி வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் கீழ் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால், மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்திற்கென நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இதில் விவசாயம், மீன்பிடி, சந்தைப்படுத்தல், சிறுகைத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 163 திட்டங்களுக்காக 67 இலட்சத்து 35,000 ரூபாவும் மற்றும் இரண்டு வீடுகளின் புனரமைப்பு வேலைகளுக்காக 3 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
 
சமுர்த்தி தலைமையக முகாமையாளர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் வவூணதீவு கோறளைப்பற்று மத்தி,  கிரான் ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் சமுர்த்தி உற்பத்தி மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானம் - 03.05.2021

04 May 2021

அமைச்சரவை தீர்மானம் - 03.05.2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 29.03.2021

30 March 2021

29.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 15.03.2021

16 March 2021

15.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 08.03.2021

10 March 2021

08.03.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 01.03.2021

02 March 2021

2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

ஊடக அறிக்கை - 23.02.2021

24 February 2021

ஊடக அறிக்கை - 194/2021

அமைச்சரவை தீர்மானங்கள் - 22.02.2021

23 February 2021

22.02.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானம் - 15.02.2021

16 February 2021

15.02.2021 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 01.02.2021

02 February 2021

2021.02.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.01.2021

26 January 2021

2021.01.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.

World Wesak conferace final logo