எதிர்வரும் 2018ம் ஆண்டுக்கான பொருளாதார மாநாட்டை இலங்கையில் நடத்த இணக்கம்
காணப்பட்டுள்ளது என்று தொலைதொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெர்ணாணடோ தெரிவித்துள்ளார்.
சுவீட்சர்லாந்தில் இவ்வருடம் நடத்தப்பட்ட உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதன் அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 23,24ம் திகதிகளில் இலங்கையில் சிறப்பு டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.