• #163, கிருலபன எவனியூ, கொழும்பு 05, இ லங்கை​
  • +94 112 51 5759

engsin

பொங்கல் தினத்தினூடாக மனித சமூகத்தின் உயர் பண்புகள் வௌிப்படுத்தப்படுகிறது

மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசார
பண்டிகைகள் மூலம் மானிட சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
 
மானுட வளர்ச்சியின் ஆரம்பம் முதலே இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினைக் கொண்டிருந்த மனிதன், ஒட்டுமொத்த இயற்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய பகவான் மீது கொண்ட  அபரிமித பக்தியை பரிணாம வளர்ச்சியை நோக்கிய பயணத்தின்போதும் கைவிடவில்லை. இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டு வரும் சூரிய வழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் இருந்து வருகின்றது. மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உணர்வுபூர்வமான உறவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வான இத்திருநாளானது, அம் மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நற் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் நாளாகவும் அமைகின்றது.
 
உழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது.
 
மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் இவ்வாறான கலாசார பண்டிகைகள் மூலம் மானிட சமுகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன. பேண்தகு யுகத்தை நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத் திருநாள் தொன்றுதொட்டு கொண்டுவரும் இந்த வாழ்த்துச் செய்தியானது அதனை மேலும் மெருகூட்டுவதாகவே அமையும். இப் பின்னணியில் சகோதர தமிழ் மக்களுக்கும் நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். 

சமீபத்திய செய்திகள்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒக்டோபர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 02.10.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - செப்டெம்பர் மாதம்

04 October 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 25.09.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஒகஸ்ட் மாதம்

16 August 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 28.08.2023, 14.08.2023, 07.08.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூலை மாதம்

05 July 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 17.07.2023, 11.07.2023, 04.07.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

28 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - 26.06.2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஜூன் மாதம்

07 June 2023

அமைச்சரவை தீர்மானங்கள்

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - மே மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

09 May 2023

அமைச்சரவை தீர்மானங்கள் - ஏப்ரல் மாதம்

அமைச்சரவை தீர்மானங்கள் - மார்ச் மாதம்

23 March 2023

அமைச்சரவை தீர்மானங்கள் 

அத்துடன் இலங்கையிலுள்ள ஊடகத்துறையின் கொள்கை திட்டமிடல் , பயிற்சி நெறிகளை வழங்குதல் , மற்றும் ஊடகத்துறைக்கான அங்கீகாரங்களை வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னின்று உதவுகின்றது.