கடந்த 11 மாத காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48, 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 77 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்குமானால் இவ்வெண்ணிக்கை ஐம்பதாயிரமாக அதிகரிக்கும் என்று அச்சம் வௌியிட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அநுர ஜயவிக்கிரம டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைக்காக நிதியொதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் பதிவாகிய டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சின் தொற்று நோய் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோய் பரவும் 10 மாவட்டங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாளைமறுதினம் (14) தொடக்கம் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான 40 மில்லியன் ரூபா நிதி சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்தெரிவித்தார்.