புதிய ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி நடத்துமாறு அனைத்து பாடசாலைகளிடமும் கல்வியமைச்சு கோரியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2017 ஆம் ஆண்டுக்கு முதலாம் தர மாணவர்களை இணைப்பதற்கான அறிவுறுத்தல்கள் அனைத்து மாகாணத்திலுமுள்ள கல்விச் செயலாளர்களுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய அனைத்து பாடசாலைகளும் குறித்த தினத்தில் மாணவர்களை இணைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிதிகளை பங்குபெறச் செய்யலாம். அத்துடன் தேசியக் கொடியேற்றல், தேசிய கீதம் இசைத்தல், பாடசாலை கீதம் இசைத்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்யலாம்.
எனினும் மாணவர்களையும் பெற்றோரையும் அசௌகரியப்படுத்தும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படக்கூடாது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.