ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளுடன் தொடர்புபட்ட செய்திகளை பிரசுரிப்பது குறித்து ஊடகவியலாளர்களை தௌிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளது.
சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அதிவேக வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுசரணையில் அரசாங்க தகவல் திணைக்களம் இச்செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.
லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் ஊடகங்களில் எவ்வாறு அறிக்கையிடுவது மற்றும் குறித்த விடயம் தொடர்பான பின்னணியை அன்றாடம் ஊடகவியலாளர்கள் எவ்வாறு அறிந்து வைத்திருப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இச்செயலமர்வில் ஊடகவியலாளர்கள் தௌிவுபடுத்தப்படவுள்ளனர்.
அதற்கமைய லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான சட்ட நடைமுறைகள், விசாரணை மற்றும் ஊடக பாவனை என்ற தலைப்பில் இச்செயலமர்வு நடத்தப்படவுள்ளது.